கள்ளக்குறிச்சியில் தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் 11 சவரன் நகையை அபேஸ் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் வாய்க்கால் மேடு தெருவைச் சேர்ந்த சீதாபதி என்பவரின் மனைவி ராஜலட்சுமி. 63 வயது மூதாட்டியான இவர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு நபர் ஒருவர், மூதாட்டி ராஜலட்சுமியிடம் உங்கள் வீட்டில் தோஷம் இருப்பதாகவும் அதனை கழிப்பதாகவும் கூறி, மந்திரம் செய்வது போல வேடிக்கை காட்டிவிட்டு பத்து நிமிடங்களுக்கு பிறகு ராஜலட்சுமி கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அவிழ்த்து மஞ்சள் நீர் கலந்த கிண்ணத்தில் வைக்க சொல்லி உள்ளார்.


மூதாட்டி ராஜலட்சுமி கழுத்தில் இருந்த 11 சவரன் தங்க சங்கிலியை கிண்ணத்தில் வைத்தவுடன், பூஜை செய்ய வேண்டியுள்ளதால் கை, கால்களை கழுவி வருமாறு மூதாட்டி ராஜலட்சுமியிடம் அந்த நபா் கூறியுள்ளார். அதன்படி, ராஜலட்சுமி கை, கால் கழுவுவதற்காக வீட்டினுள் சென்ற போது  கண்ணிமைக்கும் நேரத்தில் பாரு தங்க சங்கிலியை உடன் தலைமறைவானர்.




இதையடுத்து அதிர்ச்சி அடைந்து ராஜலட்சுமி கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் தோஷம் கழிப்பதாக கூறி என்னிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல்ஹக் உத்தரவின்பேரில் கள்ளக்குறிச்சி துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவலர்கள் தலைமையிலான போலீஸார் கள்ளக்குறிச்சி கோட்டைமேடு போன்ற இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கிப் பிடித்தனர்.



 


பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் இருசக்கரவாகனத்தில் வந்தவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணையை மேற்கொண்டதில் விசாரணையில் அவர், வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த பாருக் என்பதும், இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் வாய்க்கால் மேட்டு தெருவைச் சேர்ந்த ராஜலட்சுமி இடம் தோஷம் கழிப்பதாக கூறி அவரது கழுத்தில் இருந்த 11 பவுன் தங்க சங்கிலியை திருடிச் சென்றதையும் ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.


மேலும் பாருக் மீது சென்னை, ஆம்பூர், கள்ளக்குறிச்சி, குடியாத்தம், ஆகிய காவல் நிலையங்களில் சுமார் ஒன்பது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், இதனால் ஏற்கெனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி ஓராண்டு காலம் சிறையிலிருந்து தற்போது வெளிவந்த நிலையில் மீண்டும் கைவரிசையைக் காட்டத் தொடங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.


 


Kolar Truck Looted: லாரியை மறித்து வழிப்பறி: ரூ.6.50 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை!