மதுரை சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். இவர் கடந்த 2021- ஆம் ஆண்டு மதுபோதையில் யாசகம் பெற்று சாலையில் தங்கி வந்த 75 வயதான மூதாட்டி ஒருவரை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரை கழுத்தை நெறித்து கொலை செய்தார். இந்த வழக்கில் மணிமாறன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த மாதம் மணிமாறன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஜாமீனில் வெளியே வந்த நான்கு நாட்களில் மீண்டும் 76 வயது மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். இது தொடர்பாக சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மணிமாறன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மணிமாறன் மீண்டும் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் மாவட்ட காவல்துறை நீதிமன்றத்தில் பிணையை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்தது.
இதன் காரணமாக மணிமாறன் ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டு மீண்டும் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர் குற்றங்களில் ஈடுபடுவோரின் பிணைகள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சிவபிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை அரிட்டாபட்டியில் மரக்கன்றுகள் நட்டு அரசுக்கு நன்றி தெரிவித்த சமூக ஆர்வலர்கள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்