தஞ்சாவூரைச் சேர்ந்த ரவுடி ராஜா என்பவருக்கு தூக்கு தண்டனை விதித்து கும்பகோணம் அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டிருக்கிறது. பத்துக்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் தொடர்புடைய ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராஜா மீது 16 கொலை வழக்குகள் உள்ளன. ராஜாவின் கூட்டாளிகள் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்ட நீதிமனறம், ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கும்பகோனம் அருகே செந்தில்நாதன் என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராஜாவுக்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி பெஞ்சமின் ஜோசப் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
பிற முக்கியச் செய்திகள்:
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்