உலகம் முழுவதும் நவீன வளர்ச்சி அதிவேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் நாம் தொடர்ச்சியாக  டிரைவர் இல்லாத தானியங்கு வாகனங்கள் சாலைகளில் பார்க்க இருக்கிறோம். இது ஒரு வகையில் மிகப்பெரிய நவீன வளர்ச்சி என்றாலும், மற்றொரு வகையில் பல சிக்கல்களை தரும் என்பது மறுக்க முடியாத ஒன்று. அந்த வகையில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள குரூஸ் தானியங்கி வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 




குரூஸ் பிப்ரவரி முதல் சான் பிரான்சிஸ்கோவில் தானியங்கி டாக்ஸி சவாரிகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு வரை, இந்த தானியங்கி காரினால் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. ஆனால், ஒரு போக்குவரத்து நிறுத்தத்தின் போது ஒரு தானியங்கி குரூஸ் வாகனம் ஒரு காவலரிடம் இருந்து விலகிச் செல்லும் காட்சியை இங்கே காண முடிகிறது. 






 கடந்த பிப்ரவரி மாதம் முதல் இயங்கிவந்த குரூஸ் தானியங்கி வாகனம் விளக்குகள் எரியாமல் இருந்ததால் போலீஸார் அதை தடுத்து நிறுத்தியுள்ளனர். தடுத்து நிறுத்திய சில நொடிகளில் காவல்துறை அதிகாரி ஒருவர் அந்த காரை வந்து சோதனை செய்கிறார். அப்பொழுது அந்த காரில் யாரும் இல்லை. இதனால் காவல்துறை அதிகாரி அங்கிருந்து நகர, மீண்டும் கார் ஒரு பாதுகாப்பான இடம் நோக்கி சென்று நிற்கிறது.






இதையடுத்து, குரூஸ் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவிக்கையில்,  "எங்கள் தானியங்கி கார்  போலீஸ் வாகனத்திற்கு எப்பொழுதும் அடிபணியும். முதலில் போலீஸ் கார் எங்கள் காரை கடந்து செல்ல நினைத்ததாகவே நினைத்தது. அதன் பிறகே தன்னை போலீஸ் வாகனம் பின் தொடர்ந்ததை எண்ணி தானியங்கி கார் தானாக நின்றது என்று குறிப்பிட்டார். 


அதேபோல், "எங்கள் வாகனங்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்பது குறித்து நாங்கள் SFPD உடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறோம், இது போன்ற சூழ்நிலைகளில் அவர்கள் அழைப்பதற்காக ஒரு பிரத்யேக தொலைபேசி எண் உட்பட அனைத்தையும் தெரிய படுத்தியுள்ளோம் என்று என்று குரூஸ் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண