சமீபத்தில் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது மகாராஷ்டிரா பாலியல் வன்கொடுமை சம்பவம். 15 வயது சிறுமியை 33பேர் 9 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த வந்த கொடூர சம்பவத்தால் இந்தியாவே தலைகுனிந்தது. பெரும் பரபரப்பை உண்டாக்கிய இந்த சம்பத்தை தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுத்தது மகாராஷ்டிரா போலீசார். இந்நிலையில் தற்போது குற்ற வழக்கில் தொடர்புடைய 33 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடந்தது என்ன?
மகாராஷ்டிராவின் தானேவைச் சேர்ந்த 15 வயது சிறுமியை ஒரு இளைஞர் காதலிப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்த அந்த இளைஞரை கடைசியாக காதலிப்பதாக அந்தப்பெண் தெரிவித்துள்ளார். பின்னர் அப்பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அவர், அதனை வீடியோவாகம் எடுத்து வைத்து மிரட்டத் தொடங்கியுள்ளார். வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி தன்னுடைய நண்பர்களுக்கும் அந்தப்பெண்ணை இணங்கச் செய்துள்ளார்.
இப்படியாக 33 பேர் 9 மாதங்களாக அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஒரு கட்டத்துக்கு மேல் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி தன்னுடைய அத்தையிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சிறுமியின் அத்தை. அதன் பிறகே இந்த விவகாரம் வெளியே தெரிந்துள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தற்போது 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
33 பேர் மீதும் 376 (Rape), 376 (N), 376 (3), 376 (D) (A) உள்ளிட்ட வழக்குகளும், போக்சோ வழக்கும் பாய்ந்துள்ளது.
‛வாட்ஸ் அப்’ அந்தரங்க உரையாடல்... சென்னை மாணவியை மிரட்டிய வாலிபர் கைது!
இது குறித்து தெரிவித்துள்ள மகாராஷ்டிரா போலீசார், ''33 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இருவர் 18 வயதுக்கும் உட்பட்டவர். அவர்கள் இருவரும் சிறுவர் சீர்திருத்த சிறார் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்து பதிவிட்டுள்ள இணையவாசிகள் சிலர், கைது செய்யப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், குற்றவாளிகளின் மிரட்டலுக்கு பெண்கள் அச்சப்படக் கூடாது என்றும், தங்களுக்கு எதாவது அச்சுறுத்தல் என்றால் உடனடியாக நம்பிக்கைக்கு உரிய நபரிடமோ அல்லது காவல்துறையிடமோ தெரிவிக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளனர். பெண்களின் அச்சமே குற்றவாளிகளுக்கு வாய்ப்பாக போவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.