Crime: காதலை முறித்த பெண்! ஆத்திரத்தில் கோடாரியால் வெட்டிக் கொன்ற காதலன் - தெலங்கானாவில் பயங்கரம்!

தெலங்கானாவில் காதலியயை கோடாரியால் காதலன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

Crime: தெலங்கானாவில் காதலியயை கோடாரியால் காதலன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது.

காதலியை வெட்டிக்கொன்ற காதலன்:

இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.  குறிப்பாக, வடமாநிலங்களில் நடக்கும் வன்முறை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இந்தநிலையில், தற்போது ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, தெலங்கானாவில் காதலியயை கோடாரியால் காதலன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள கானாபூர் நகரில் வசித்து வருபவர் அலேக்யா. இவர் நேற்று மதியம் 1.30 மணியளவில் தையல் கடையில் இருந்து தனது சகோதரியுடன் வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தார்.  அந்த நேரத்தில், இளைஞர் ஒருவர் பெண் அலேக்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் நீடித்த நிலையில், கையில் வைத்திருந்த கோடாரியால் பெண் அலேக்யாவை வெட்டி கொலை செய்துள்ளார். 

பின்னர், அங்கிருந்த அலேக்யாவின் சகோதரியையும் வெட்டியிருக்கிறார். இதனால், இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் இரண்டு பேரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அலேக்யா உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்:

மேலும், உயிரிழந்த பெண்ணின் சகோதரிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலை செய்த நபரை தேடி வருகின்றனர். கொலை செய்த நபர் ஜுகந்தி ஸ்ரீகாந்த் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பெண் அலேக்யா மற்றும்  ஜுகந்தி ஸ்ரீகாந்த்  இருவரும் காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. ஆனால், இவர்களது காதலுக்கு  அவர்களது வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனால், அந்த பெண்ணும் ஜுகந்தி ஸ்ரீகாந்துடன் காதலை முறித்து, வீட்டில் பார்ப்போரை திருமணம் செய்து கொள்வதாக அந்த இளைஞரிடம் கூறியதாக தெரிகிறது. 

இதனால், ஆத்திரத்தில் பெண் அலேக்யாவை, ஜுகந்தி ஸ்ரீகாந்த் கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க

Chennai Bomb Threat: பரபரப்பு… சென்னையில் பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்- காவல்துறை சோதனை

Crime: 6 ஆண்டுகளாக இளம்பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை.. வீடியோ வைத்து மிரட்டிய இளைஞர் கைது!

Continues below advertisement
Sponsored Links by Taboola