Bomb Threat : கர்நாடக சட்டசபைக்கு வெடிகுண்டு மிரட்டல் ! மென் பொறியாளர் கைது !
இந்த நிலையில் மிரட்டல் விடுத்த பிரசாந்த் குமார் என்பவர் , விஜயநகர மாவட்டம் , ஓசூர் சாலையில் உள்ள ஹோசப்பேட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்

கர்நாடக சட்டசபை கூடும் விதான சவுதாவில் வெடுகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலி தகவல் கொடுத்த ஐடி ஊழியர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் சட்டசபை கூடும் இடமான விதான சவுதாவில் தினமும் பல அமைச்சர்கள் , கட்சித்தொண்டர்கள் வந்து போவது வழக்கம். பரபரப்பான இந்த இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மர்ம நபர் ஒருவர் , கர்நாடக அரசின் முதன்மை செயலாளருக்கு மொபைல் மூலம் தொடர்புக்கொண்டு கூறியிருக்கிறார். தொடர்ந்து 3 முறை அழைத்து , வெடிகுண்டு இருப்பதாக அந்த நபர் பரபரப்பாக பேசியதால், அதிர்ந்து போன முதன்மை செயலாளர் வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து , சட்டசபையின் உள்ளேயும் வெளியேயும் தீவிர சோதனை செய்தனர். ஆனால் அங்கு எந்த வித வெடிகுண்டோ , அதனை வைக்க முயற்சித்ததற்கான அடையாளமோ இல்லை. முடிவில் அது போலியான தகவல் என்றும் , திட்டமிட்டே அந்த நபர் செய்திருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து , தனியாக ஒரு குழு அமைத்து சம்பந்தப்பட்ட அந்த நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் தேடி வந்தனர்.
Just In





இந்த நிலையில் மிரட்டல் விடுத்த பிரசாந்த் குமார் என்பவர் , விஜயநகர மாவட்டம் , ஓசூர் சாலையில் உள்ள ஹோசப்பேட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார் . 41 வயதாகும் பிரசாந்த் மெக்கானிக்கல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். மேலும் ஐடி துறையில் பணியாற்றியிருக்கிறார். சமீபத்தில் அவருக்கும் , அவரது மனைவிக்கும் விவாகரத்து ஆன நிலையில் , பெறோருடன் வசித்து வந்திருக்கிரார். கடந்த 7 மாதங்களுக்கு முன்னதாக வேலையை விட்டு வெளியேற்றப்பட்டதாக தெரிகிறது. இதனால் யாரும் இல்லாமல் தனியாக விரக்தியில் இருந்தவர் , கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2.06 மணியளவில் அவர் தலைமை செயலகத்திற்கு அழைப்பை செய்திருக்கிறார். இது குறித்து விசாரிக்கும் பொழுது பிரசாந்த் தீவிர மன உளைச்சலில் இருந்ததாகவும் , அவர் இணையத்தில் கிடைத்த எண்ணிற்கெல்லாம் இப்படியான அழைப்புகளை செய்து வந்தது தெரிய வந்தது.
இந்த விசாரணையில் தொடர்புடைய ஒரு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் , “குற்றம் சாட்டப்பட்டவருக்கு குற்ற வரலாறு இல்லை. அந்த நபரை தற்போது கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து வருகிறோம்” என்றார். இந்த சம்பவம் கர்நாடகாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க..
David Miller : உலகை விட்டுப் பிரிந்த குட்டி ரசிகை..! மனம் உடைந்து போன டேவிட் மில்லர்..!