மேலும் அறிய
Advertisement
மாணவிகளுக்கு வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தல்..! அடுத்த போக்சோ வழக்குகளில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!
சிவசங்கர் பாபா மீது ஒரு வழக்கில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த வழக்குகளிலும் குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் தப்பியோடி, டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை கடந்த ஜூன் 16-ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சட்ட வல்லுனர்களின் ஆலோசனையின் படி, சிவசங்கர் பாபா மீது 3 வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் இருவர் சகோதரிகள் ஆவர். மாணவிகள் அளித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிவசங்கர் பாபா மீது செங்கல்பட்டு கோர்ட்டில் முதல் வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சிவசங்கர் பாபா கேளம்பாக்கம் பள்ளியில் படித்த மாணவிகளிடம் வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அளித்த தகவல்களின்படி, 3 வழக்குகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.மாணவிகளை கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தலில் அவர் ஈடுபட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது என்று தெரிவித்துள்ளானர். சிவசங்கர் பாபா மீது ஒரு வழக்கில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த 2 வழக்குகளிலும் குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து குற்றப்பத்திரிகையை தயாரிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
சிவசங்கர் பாபா மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் செங்கல்பட்டு கோர்ட்டில் 2-வது குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன் பிறகு 3-வது வழக்கிலும் போலீசார் தனி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்கிறார்கள். இதன் மூலம் சிவசங்கர் பாபா எளிதில் ஜாமினில் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சிவசங்கர் பாபா தனக்கு ஜாமின் வழங்கக் கோரி தாக்கல் செய்த 2 மனுக்களும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தள்ளுபடி ஆனது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை விரைவாக நடைபெற்று வருவதால் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சிவசங்கர் பாபா வழக்கின் விசாரணை அதிகாரியான சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. குணவர்மன், சென்னை மாநகராட்சியின் லஞ்ச ஒழிப்புத்துறைத் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion