பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றவாளிகளை தாக்கியதில் அவர்கள் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

குழந்தைகளுக்கான இலவச சேவை மையம்


 

சிவகங்கை மாவட்டம்  மானாமதுரை அருகே உள்ள கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக குழந்தைகளுக்கான இலவச சேவை மையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல்கள் குறித்தும் தொடு உணர்வு குறித்தும் வகுப்பு எடுத்துள்ளனர். மேலும் இது போன்ற பிரச்னைகள் எதனையும் குழந்தைகள் சந்தித்துள்ளனரா? என கேள்வி எழுப்பியபோது அதில் எட்டு பெண் குழந்தைகள் ஏழு நபர்கள் மீது பாலியல் சீண்டல் உள்ளிட்ட புகார்களை தெரிவித்துள்ளனர்.

 


 

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு


 

இதனை அடுத்து குழந்தைகள் பாதுகாப்பு நல குழுவினர் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததுடன் இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் புகார் அளிக்கவே  46 வயதுடைய ராமு, பழனி, 50 வயதான மணி, 38 வயதான சசிவர்ணம், 46 வயதான லெட்சுமணன், 66 வயதான முனியன், 72 வயதான மூக்கன் ஆகிய அந்த ஏழு நபர்களை பிடித்து அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதுடன் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

 

பெற்றோர்கள் குற்றவாளிகளை தாக்குதல்


 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றவாளிகளை தாக்கியதில் அவர்கள் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எட்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த 7 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


 


 

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Bank Job: 1000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு; மாதம் ரூ. 85,920 சம்பளம்... முழுவிவரம் இதோ !