Just In





Siva Shankar Baba Arrested: டேராடூனில் டேரா போட்டு டெல்லியில் தூக்கிய சிபிசிஐடி! சிவசங்கர் பாபா சிக்கியது எப்படி?
டெல்லியில் இன்று கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, மாலை சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
தனது பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த சிவசங்கர் பாபா, நெஞ்சுவலி எனக்கூறி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தனியார் சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி தனிப்படை போலீசார் விசாரணைக்காக டேராடூன் சென்றபோது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
தப்பியோடிய அவர் வேறு ஆசிரமங்களில் பதுங்கி உள்ளாரா என சிபிசிஐடி தேடுதல் வேட்டை நடத்தி வந்தது. . மேலும், சிவசங்கர் பாபா நேபாளத்துக்கு தப்பிச்செல்லாமல் தடுக்க உத்தரகாண்ட், டெல்லியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. சிவசங்கர் இல்லாமல், திரும்ப போவதில்லை என்பதில் உறுதியாக இருந்த சிபிசிஐடி போலீசார், டேராடூனில் டேரா போட்டனர். அப்பாடா... போலீஸை ஏமாத்திட்டோம் என டெல்லி காசியாபாத்தில் ஷவர் பாத் எடுத்துக் கொண்டிருந்த சிவசங்கர் பாபா பற்றி, சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
Twitter | 'என்னதான் சொல்றீங்க?' நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜராக ட்விட்டருக்கு சம்மன்!
உடனே டில்லி விரைந்த தனிப்படை, அங்குள்ள போலீஸ் உதவியுடன் காசியாபாத்தில் ஈஸியாய் சிவசங்கரை தூக்கினர். போலீசார் தன்னை நெருங்குவார்கள் என சற்றும் நினைக்காத பாபா, பேபே என விழித்தார். புகாரை கூறி, அவரை கைது செய்வதாக போலீசார் கூற, தன் வசம் வேறு பாயிண்ட் எதுவும் இல்லாத நிலையில், விரல் பிடித்து நடக்கும் குழந்தை போல அவர்கள் பின் நடந்தார் சிவசங்கர் பாபா. அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்திய பின், தமிழ்நாடு அழைத்து வந்த விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். இன்று மாலை சிவசங்கர் பாபா சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்திற்கு அருகே உள்ள தனியார் சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளி சுஷில் ஹரி பள்ளி. இந்த பள்ளியின் நிர்வாகியாக செயல்படுபவர் சிவசங்கர். இவர் தன்னை கிருஷ்ணரின் அவதாரம் என்றும், வாழும் கடவுள் என்றும் கூறிக்கொண்டு, மக்களுக்கு ஆசி வழங்கி வருவதால் அவரை சிவசங்கர் பாபா என்று அழைக்கின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்மீது அந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள், இவர் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டினர். இதையடுத்து, அந்த மாணவிகளின் புகாரை அடிப்படையாக கொண்டு, அந்த தனியார் பள்ளியில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினரும், காவல்துறையினரும் சோதனை நடத்தினர். ஆனால், அப்போது அங்கு சிவசங்கர் பாபா இல்லை என்று பள்ளி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.
இதையடுத்து, கடந்த 11-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சிவசங்கர் பாபா, பள்ளியின் தாளாளர், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் சிவசங்கர் பாபா நேரில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் சிவசங்கர் பாபாவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும், அவர் டேராடூனில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விளக்கம் அளித்தார். இதையடுத்து, ஆஜரான பிற நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டது.
இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசமும் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக சிவசங்கர் பாபாவிடம் விசாரணையை நடத்த சிபிசிஐடி தனிப்படை நேற்று டேராடூன் விரைந்தனர்.
அரியலூரில் 10 ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள்: விண்ணப்பித்த ஓஎன்ஜிசி-யின் திட்டம் என்ன?