, “தமிழ்நாட்டில் எந்த பகுதியையும் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக்கூடாது. தமிழ் நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது” என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த 13ஆம் தேதி எழுதிய கடிதத்தில் கூறியிருந்தார். கடந்த 10ஆம் தேதி நடந்த Discovered Small Fields ஹைட்ரோகார்பன் எடுப்புக் கொள்கையின் கீழ் மூன்றாம் கட்ட ஏலத்தில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை, இராமநாதபுரம் பகுதிகளை சேர்த்ததால் அந்த ஏலத்தை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கோரியிருந்தார்.
மணல் கொள்ளை; நாக நதி ஆற்றில் இறங்கி ஆர்பாட்டம்!
இந்தக் கடிதம் எழுதிய 48 மணி நேரத்திற்குள் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ONGC அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதிகோரி தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளது.
L-1 PML எனும் 948.16 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் வளங்களை எடுப்பதற்காக 2004ஆம் ஆண்டு ONGC நிறுவனம் உரிமம் பெற்றது. இந்த பகுதியில் அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டாம் எனும் ஊரின் சுற்றுவட்டாரப் பகுதியில் 10 ஆய்வுக் கிணறுகளையும் கடலூர் மாவட்டத்தின் நெய்வேலி சுற்று வட்டாரப் பகுதியில் 5 ஆய்வுக் கிணறுகளையும் அமைப்பதற்கு ONGC நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக அரியலூர் மாவட்டத்தில் 10 ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி ONGC நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளது.
கடந்த 15/06/2021ஆம் தேதி ONGCயின் காவிரி படுகை மேலாளர் ராஜேந்திரன் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய உறுப்பினர் செயலருக்கு அனுப்பிய கடிதத்தில் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி வெளியிட்ட உத்தரவை (S.O. 236(E)) மேற்கோள் காட்டி இத்திட்டத்தை Category ‘B2’ அடிப்படையில் கருதி சுற்றுச்சூழல் அனுமதிக்காக பரிசீலிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
2020 ஜனவரி 16ஆம் தேதிக்கு முன்பு வரை ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் திட்டம் அனைத்தும் Category ‘A’ ஆக இருந்தன. ‘A’ என வரையறுக்கப்பட்ட திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க ஆய்வறிக்கை தயாரிப்பது, திட்டம் குறித்த பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது அவசியமாகும். இவற்றிலிருந்து விலக்களிக்க ஆய்வுக் கிணறுகள் அமைக்கும் திட்டங்களை Category ‘B2’ என மாற்றியமைத்தது சுற்றுச்சூழல் அமைச்சகம்.
இந்தத் திருத்தத்தை எதிர்த்து மீனவத் தந்தை கே.ஆர்.செல்வராஜ்குமார் மீனவ நலச் சங்கம் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையிலேயே புதிய திருத்தத்தின் கீழ் சுற்றுச்சூழல் அனுமதிகோரி ONGC நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் முதல் முறையாக டெல்லி செல்லும் மு.க.ஸ்டாலின் நாளை பிரதமரை நேரில் சந்திக்கும்போது இதுகுறித்து வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது”
100 கோடி கடன்... ஒன்றரை கோடி கமிஷன்! ‛தங்க மகன்’ ஹரிநாடாருக்கு அடுத்தடுத்து பங்கம்!
-