மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தேர் தெற்கு வீதி காந்தி பூங்கா எதிரே வசிப்பவர் நகை வணிகம் செய்துவரும் முத்துராமன். கடந்த ஆண்டு புதுரக சொகுசு கார் ஒன்றை வாங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் முத்துராமன் தனது குடும்பத்தினர் வெளியூர் சென்று விட்டு பின்னர் ஒரு சில நாட்களாக தனது வீட்டின் முன்பு காரினை நிறுத்தி வைத்து கவர் கொண்டு மூடி வைத்துள்ளார். இதனிடையே நேற்று நள்ளிரவு வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த காரின் நான்கு சக்கரங்களையும் கல்லை வைத்து முட்டுக்கொடுத்து அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.




இன்று காலை முத்துராமன் எழுந்து பார்த்தபோது காரின் நான்கு சக்கரங்களும் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து முத்துராமன் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், வெள்ளை நிற கார் ஒன்று இருமுறை அப்பகுதியில் சென்று வருவதும், பின்னர், நீண்ட நேரம் ஒரு இடத்தில் நின்று விட்டு மீண்டும் செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இதனால் அடையாளம் தெரியாத நபர்கள் காரில் வந்து முத்துராமனின் கார் சக்கரங்களை கழட்டி திருடி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.


Rahul Gandhi On BRS: ”நான்கு டயர்களும் பஞ்சரான வண்டி தான் பாஜக” - ராகுல் காந்தியின் பேச்சுக்கு குவியும் எதிர்வினைகள்




சீர்காழி நகரின் மையப் பகுதியான தேர் தெற்கு வீதியில் பிரதான சாலையின் ஓரம்  நிறுத்தப்பட்டிருந்த காரில் நான்கு சக்கரங்களையும் பொறுமையாக யார் கண்ணிலும் தென்படாமல் அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்ற சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சீர்காழி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரனை மேற்கொண்டுள்ளனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.