மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து கடக்கம் வரை அரசு பேருந்து ஒன்றும், கடக்கம் அடுத்த கடலி வரை இரண்டு மினி பேருந்துகளும் மூன்று வழித்தடங்களில் இயங்கி வருகிறது. வெவ்வேறு வழித்தடங்களில் இருந்து பேருந்துகள் சென்றாலும் கடக்கம் சென்று கடலி செல்ல வேண்டும்.  இந்நிலையில் அரசு பேருந்து மயிலாடுதுறையிலிருந்து எலந்தகுடி, வழுவூர், பெருஞ்சேரி,  கடக்கம் வரை சென்று மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்தது. 




அப்போது தனியார் (அரவிந்த்) மினி பேருந்தானது மயிலாடுதுறையில் இருந்து எலந்தகுடி, கிளியனூர், கடக்கம், முத்தூர் வரை சென்று விட்டு  மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்தது. மினிபேருந்தில்  டிரைவர் கலைவாணன், கண்டக்டர் கதிர் பணியில் இருந்தனர். இந்நிலையில், அரசு பேருந்து கடக்கம் சென்று விட்டு மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதன் பின்னால் வந்த மினி பேருந்து அரசு பேருந்தை முந்த முயற்சித்துள்ளது. கடக்கம் பகுதியில் சாலை திருப்பத்தில் வேகமாக வந்த மினி பேருந்து அரசு பேருந்தை முந்த முயன்றது.


Durai Murugan On Mekadatu: மேகதாது விவகாரம் - கர்நாடகாவுடன் பேச முடியாது; அடுத்த மூவ் இது தான் - அமைச்சர் துரைமுருகன் அதிரடி




திருப்பத்தில் அதிவேகமாக வந்து திரும்பியதால் மினி பேருந்தில் பயணம் செய்த பின் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் பேருந்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மினி பேருந்தை சிறை பிடித்தனர். படுகாயம் அடைந்த கிளிமங்கலம் கிராமத்தை சேர்ந்த 31 வயதான மகேந்திரன் என்பவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 


Opposition Meeting : திடீர் முடிவு...எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைப்பு...வேறு இடத்திற்கு மாற்றமா..? என்ன காரணம்?




தொடர்ந்து பெரம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதன் பெயரில் மினி பேருந்து காவல் நிலையம் எடுத்துச் செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து பெரம்பூர் காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர். அதி வேகப் பயணம் ஆபத்தில் முடியும் என்பதை கருத்தில் கொள்ளாமல் அதிக அளவில் பயணிகளை ஏற்ற வேண்டும் என்பதற்காக அரசு பேருந்தை முந்த முயன்று பேருந்தை அதிவேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி போக்குவரத்து துறை அதிகாரிகள் ஒழுங்குபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.