Crime News: கள்ள லாட்டரி விற்ற கும்பல் மீது சரமாரி தாக்கு... திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் பாதிக்கப்பட்டவர்!

Sirkazhi: சட்டத்திற்கு புறம்பாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்ததால், இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளிக்காத நிலையில்...

Continues below advertisement

தமிழகத்தில் கடந்த 2003 ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது லாட்டரி விற்பனைக்குத் தடை விதித்து உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேலும், லாட்டரி தொழிலில் கொடிகட்டிப் பறந்தவர்கள் தங்கள் முகாம்களை கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு மாற்றிக்கொண்டனர். இந்த நிலையில்தான், தற்போதைய தி.மு.க ஆட்சியில் லாட்டரி மீதான தடையை நீக்குவது பற்றிய பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் பரவியது.

Continues below advertisement


இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சிதம்பரம் சாலை இரணிய நகரில் உள்ள ஒரு கடையில் கடந்த ஓராண்டிற்கு மேலாக சிதம்பரம் பகுதியை சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கடையில் இருந்து தான் சிதம்பரம், வல்லம்படுகை, சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்கு மொத்த விற்பனையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் செல்லப்படுகிறது.


இந்த சூழலில் நேற்று வழக்கம்போல் இந்த கடையில் 4  பணியாளர்கள் லாட்டரி சீட்டுகள்  விற்பனை செய்துள்ளனர். அப்பொழுது ஏராளமானோர் பரிசு மோகத்தில் லாட்டரி சீட்டுகளை வாங்கி கொண்டு இருந்த நிலையில் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு தங்கள் வாகனத்தில் கொண்டு வந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கையில் எடுத்துக்கொண்டு கடையின் உள்ளே புகுந்து, கடையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு பணியாளரை பயங்கரமாக தாக்கி உள்ளனர். இதனை கண்டு அஞ்சிய மீதமுள்ள மூன்று பணியாளர்களும் பயந்துபோய் கடையில் உள்ள மேஜையின் அடியில் அமர்ந்துகொண்டனர். 

 


இதனை தொடர்ந்து மர்ம நபர்கள் பணியாளர்களின் விலை உயர்ந்த 3 செல்போன்களையும் பிடுங்கிக்கொண்டு கடையில் இருந்த சுமார் 3 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு தாங்கள் கொண்டுவந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். சட்டத்திற்கு புறம்பாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்ததால், இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளிக்காத நிலையில், இது குறித்து தகவலறிந்த சீர்காழி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பட்டப்பகலில் குடியிருப்புக்கு மத்தியில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இப்பகுதியில் கள்ளச்சந்தையில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருவதாகவும், இது காவல்துறையினருக்கு தெரிந்திருந்தும் அவர்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறார்கள் என அப்பகுதி பொதுமக்கள் சீர்காழி காவல்துறையினர் வீடு குற்றச்சாட்டை தெரிவித்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola