Crime: சீனர் என்று கருதி மர்ம கும்பல் கொடூரமாக தாக்கியதில், சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்தவர் படுகாயம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கொடூர தாக்குதல்:


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்தவர் கடந்த 15ஆம் தேதி நண்பர்கள் சிலருடன் திருமணத்திற்கு சென்றுவிட்டு நள்ளிரவில் தனியாக வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் அவரை வழிமறித்து முதலில் பேச்சு வார்த்தை கொடுத்துள்ளனர். யார் நீ? எங்கிருந்த வருகிறாய்? என்று பல கேள்விகளை கேட்டுள்ளனர்.  அந்த நபர் சொல்ல மறுத்ததால் அவரை கடுமையான வார்த்தையால் பேசினர். அதோடு, இல்லாமல் அவரை அருகில் கிடந்த தடியை எடுத்து சரமாரியாக அடித்துள்ளனர். அவரின் வயிற்று, முதுகு பகுதியில் கடுமையாக தடியால் அடித்துள்ளனர். இதனால் வலி தாங்காமல் கத்தியுள்ளார். அப்போது அவரை விடாமல் தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தனர். பின்னர், சீனர் என்று அழைத்து நாட்டில் இருந்து வெளியேறும்படி கூறினர். பின்னர், அவரை சாலை ஓரத்தில் அமர வைத்து அவரை மூன்று பேர் சேர்ந்து தடியால் கடுமையாக தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்த மயங்கி விழுந்தார்.


வழக்குப்பதிவு: 


பாதிக்கப்பட்டவர் சட்டையின்றி சாலையின் ஓரத்தில் ரத்தக் காயங்களுடன் மயங்கி கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர். மேலும், அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஷாக் வீடியோ: 


இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில், பாதிக்கப்பட்ட நபரை ஒரு கடைக்கு வெளியில் ரத்த காயங்களுடன் சட்டை இல்லாமல் அமர்ந்திருக்கிறார். அப்போது, அங்கு வந்த போலீசார் அவர் மீது டார்ச் லைட் அடித்து யார் என்று விசாரித்துள்ளனர். ரத்த காயங்களுடன் இருக்கும் அவரை மருத்துவமனையில் கொண்டு சென்றது போன்று வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ”சிக்கிம் மாநிலம் ரின்சென்பாங் நகரத்தைச் சேர்ந்தவர்  தினேஷ் சுப்பா (31). இவர் தனது மனைவி, 3 மாத குழந்தையுடன் வாழ்வாதாரத்தை  தேடி 7 மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் குடிப்பெயர்ந்தார். இவர் ஒரு உணவகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரை ஆகஸ்ட் 15ஆம் தேதி சீன நாட்டைச் சேர்ந்தவர் என்று கருதி அவரை மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது" என்று தெரிவித்தனர்.