திருப்பூரில் கோட்சே நினைவு தின வீரவணக்க நாள்: சிவசேனா நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு!

திருப்பூரில் கோட்சே நினைவு தினத்தை கொண்டாடிய சிவசேனா கட்சியினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Continues below advertisement


தேச தந்தை மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் கடந்த 1949 ம் ஆண்டு நாதுராம் கோட்சே ஹரியானா மாநிலத்தின் அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டார். தேசத்தின் தந்தை காந்தியடிகளை கொலை செய்தவர்  கோட்சே என்றாலும் இந்துத்துவவாதிகள் இவரை மாவீரராக போற்றி வருகின்றனர். 

Continues below advertisement

அன்றைய கோட்சேவின் நினைவு நாளில் இந்தியாவில் உள்ள குஜராத், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இவரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து பலரும் வீரவணக்க நாளாக அனுசரித்து வந்தனர். தொடர்ந்து, இந்து அமைப்பினர் செய்த செயலுக்கு காங்கிரஸ் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து குஜராத் ஜாம்நகரில் உள்ள கோட்சேவின் மார்பளவு சிலையை அடித்து உடைத்தனர். 


இந்தநிலையில், திருப்பூரில் கடந்த 16 ம் தேதி தேச தந்தை மகாத்மா காந்தி அடிகளை படுகொலை செய்த வழக்கில் தூக்கிலிடப்பட்ட நாதுராம் கோட்சே நினைவு நாளில் திருப்பூரில் உள்ள சிவசேனா அலுவலகத்தில் யுவ சேனா சார்பில் கோட்சே நினைவுநாள் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டது. அப்போது கோட்சேவை வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

 

இது தொடர்பாக நல்லூர் காவல்நிலையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் , சிவசேனா கட்சியின் மாநில தலைவர் அட்சயா திருமுருகன் தினேஷ் மீது   கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் நடப்பது,பொதுமக்களிடம் அச்சுறுத்தும் வகையில் நடப்பது  மற்றும் இருசாரார் இடையே பகையுணர்வை வளர்ப்பது ஆகிய குற்றத்திற்காக 153, 505 (1) (b), 505 (1) (c) மற்றும்  505 (2) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : ராஜஸ்தானில் ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா... காரணம் இது தான்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola