மழை பாதிப்பு குறித்து எனக்கும் தெரியும் நானும் பாதிக்கப்படுள்ளேன் மக்கள் கவலை பட வேண்டாம் நிரந்திர வெள்ளதடுப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபடும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என வேளான்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி*
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவ்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தெற்கு, கிழக்கு வங்க கடல் மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, தாழ்வு மண்டலமாக மாறியது. தொடர்ந்து புயல் சின்னமாக மாறியது இதன் காரணமாக சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. தொடர் கன மழையால் கடலூர் தென் பெண்ணையாற்றில் நேற்று காலை முதல் பெருக்கெடுத்து ஓடிய மழைவெள்ளத்தால் மாவட்டத்தில் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், கடலூர் நகர பகுதிகள் மற்றும் ஆற்றின் கரையோர கிராம பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
மேலும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூரில் 50க்கு மேற்பபட்ட கிராமங்களிலும் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ள பாதிபக்கப்பட்ட பகுதியான பெரியகங்கனாங்குப்பம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் சூழந்த பாதிப்புகளை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பார்வையிட்டு மக்களை சந்தித்தார். பின்னர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள திடீர் குப்பம் பகுதியில் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு தவித்த மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார் தொடர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்தித்து பேசினார், அப்பொழுது அங்கு மக்களோடு இருந்த வளர்ப்பு நாய்க்கு பிஸ்கட் அளித்தார். பின்னர் பண்ருட்டி சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்கள் தங்கி உள்ள முகாம்களில் அவர்களுக்கு பிஸ்கட் மற்றும் பிரெட் வழங்கினார்,
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கடலூர் மாவட்டம் ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்தால் அதிகளவில் பாதிக்கக்கூடும் பாதிக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் வடிகால் வசதிகளை நிரந்தர வெள்ளதடுப்பு பணிகளை செய்திருக்க வேண்டும் ஆனால் அவர்கள் செய்யவில்லை. தமிழக முதல்வர் தற்போது ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் கடலூர் மாவட்டம் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார். அதேபோல் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது கடலூர் மாவட்டம் மழை வெள்ளத்தால் பாதிக்காதவாறு நிரந்திர வெள்ளத்தடுப்பு பணிகளை அரசு மேற்கொள்ளும், மழை பாதிப்பு குறித்து எனக்கும் தெரியும் நானும் பாதிக்கப்படுள்ளேன் மக்கள் கவலை பட வேண்டாம் நிரந்திர வெள்ளதடுப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபடும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என கூறினார். ஆய்வின் பொழுது தொழிலாளர் நலன் துறை அமைச்சர் கணேசன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் உடன் இருந்தனர்.