நேற்று கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வெங்கக்கல்பட்டியில் வாகன தணிக்கையில் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் உயிரிழந்தார். கரூரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திற்கு ஆட்கள் ஏற்றி செல்லவதற்காக தனியார் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் பஞ்சப்பட்டியை சேர்ந்த தனியார் வாகனம் ஒன்று போக்குவரத்து சீர்படுத்தும் பணியில் இருந்த ஆய்வாளர் கனகராஜை இடித்துவிட்டு நிற்காமல் அதிவேகத்தில் சென்றது. இதில் பலத்த காயமடைந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் கனகராஜ் உயிரிழந்தார்.

Continues below advertisement

சேலத்தில் சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் தரைமட்டம் - அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு படை விரைவு

Continues below advertisement

இந்த விபத்து தொடர்பாக கரூர் நகர டிஎஸ்பி தேவராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விபத்து நடந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளையும் சாலை விபத்து நடந்த நேரத்தையும் வைத்து மேற்கொண்ட விசாரணையில் ஆய்வாளரை இடித்துவிட்டு சென்ற வாகனம் வேன் என்பது உறுதி செய்யப்பட்டது.  

கந்து வட்டி புகாரளித்தால் போலீஸ் கட்டப்பஞ்சாயத்து - மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனு

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் 

இதனடிப்படையில் வாகனம் மற்றும் ஓட்டுநரை காவல்துறையினர் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாகனம் தோகமலையை அடுத்த கழுகூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். வேனின் வாகனப்பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். 

வேனின் உரிமையாளரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றி செல்லும் வாகனத்தை இயக்கிய ஓட்டுனர் தோகமலை பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பது தெரியவந்தது. விபத்துக்கு காரணமான வேன் பறிமுதல் செய்யப்பட்டு தாந்தோனிமலை காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தப்பி ஓடிய சுரேஷ்குமாரை டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கரூர் மாணவி தற்கொலை விவகாரம் : எங்களுக்கு சம்பந்தமில்லை என பள்ளி நிர்வாகம் வாட்சப் கடிதம்

கடந்த 16 மணி நேரத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளரை மோதி சென்ற வாகனத்தை பறிமுதல் செய்த நிலையில் ஓட்டுநரை தேடி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த கரூர் போக்குவரத்து ஆய்வாளர் கனகராஜ் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ரூபாய் 50 லட்சம் நிதி உதவி வழங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். 

பாலியல் தொந்தரவால் உயிரிழந்த கரூர் மாணவி குடும்பத்திற்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆறுதல்