கரூரில் கடந்த 19ஆம் தேதி தனியார் பள்ளியில் பயிலும் வகுப்பு மாணவி கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த கடிதத்தின் அடிப்படையில் தனக்கு பாலியல் தொந்தரவு ஏற்பட்டுள்ளதாகவும், பாலியல் தொந்தரவால் பாதிகப்பட்டு உயிரிழக்கும் கடைசி மாணவியாக நான்தான் இருக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். மாணவியின் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிலையில் இந்த வழக்கு தொடர்பாக வெங்கமேடு காவல் ஆய்வாளர் கண்ணதாசன் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 



இந்த வழக்கை தற்போது ஏடிஎஸ்பி கீதாஞ்சலி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் பள்ளியிலும் மாணவியின் தாயார் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு கட்சியினர் மாணவி இல்லத்தில் வந்து துக்கம் விசாரித்து சென்று கொண்டுள்ள நிலையில்  முன்னாள் போக்குவரத்துதுறை அமைச்சரும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் மாணவியின் குடும்பத்தில் தாயாரிடம் நேரில் சென்று தனது ஆறுதல் கூறினார். 



கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்க 


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றபோது ஆய்வாளர் கண்ணதாசன் உறவினர்களை தாக்கியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாணவியின் தாய் உட்பட உறவினர்களை இரவு முழுவதும் விசாரணை என்ற பெயரில் குற்றவாளிகளைப் போல காவல் நிலையத்தில் தங்க வைத்துள்ளனர்.




பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கையை விரைந்து செயல்படுத்த வேண்டும். பொய் வழக்குகள் போடுவதை காவல்துறை நிறுத்திக் கொள்ள வேண்டும். பாலியல் தொல்லை காரணமாக கரூரை சார்ந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது மிகுந்த மன வேதனையை தருகிறது. மேலும், மாணவியின் தற்கொலைக்கு காரணமான குற்றவாளிகள் அனைவருக்கும் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும்,




மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க  அம்மா ஆட்சியில்  பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 1860 ஆம் ஆண்டின் IPC சட்டப்படி, கடுமையான தண்டனைகள் வழங்க வழிவகை செய்யப்பட்டன.  அதை பின்பற்றி இச்செயலுக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று  கூறினார்.