விஜய் டிவி பிக்பாஸ் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. இன்று ஸ்கூல் டாஸ்க்கைப் படிக்கிறார் ராஜு. டாஸ்க்கின் பெயர் கனா காணும் காலங்கள். ஹெட்மாஸ்டராகவே மாறிவிட்ட ராஜு, ப்ரியங்காவிடம் ”கை காட்டு” என்கிறார். முடியாது என ப்ரியங்கா சொன்னதும், ”சரி கால் ஓக்கேவா”என்றார். செம குபீர் மொமெண்ட்டாக இருக்கிறது இது.





விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் 100 நாட்கள் தங்கியிருக்க வேண்டும். அவர்களுக்குள் நிலவும் சண்டைச் சச்சரவுகள், மனஸ்தாபங்கள், வாக்குவாதங்களே பிக்பாஸ். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.00 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி, வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணிக்கும் ஒளிப்பரப்பாகி வருகிறது. பிக்பாஸின் 5 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகச்சியில் இருந்து விலக இருப்பதாகவும், அவருக்கு பதிலாக அவரின் மகளான ஷ்ருதிஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  முன்னதாக, அமெரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசன் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து சென்னையில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக சொல்லப்படுகிறது.