மருத்துவர்கள் சிலர் அவ்வப்போது சில குற்றச்சாட்டுகளில் சிக்குவது உண்டு. அந்தவகையில் தற்போது மருத்துவர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. மருத்துவர் ஒருவர் சுமார் 80க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செயல்களை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பாட்னாவைச் சேர்ந்த கிருஷ்ணா சிங் என்பவர் 1974ஆம் ஆண்டு மருத்துவம் படித்துள்ளார். அதன்பின்னர் அவர் 1976ஆம் ஆண்டு லண்டனில் மருத்துவராக பணியாற்றி வந்தார். அதன்பின்னர் 1983ஆம் ஆண்டு ஸ்காட்லாந்திலுள்ள ஒரு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
மேலும் படிக்க:காதலிப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - இளைஞருக்கு 41 ஆண்டுகள் சிறை
அங்கு 2018ஆம் ஆண்டு வரை இவர் பணியாற்றியுள்ளார். அந்த சமயத்தில் இவர் பாலியல் குற்றங்கள் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிலர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இவர் 80க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் செய்ததாக கூறப்படுகிறது. இந்தப் புகார் தெரிவித்த பெண்களில் 5 பேர் 1990 முதல் 2004 வரை அந்த மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் தவிர 70க்கும் மேற்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்த குற்றங்கள் தொடர்பாக 2019ஆம் ஆண்டு முதல் கிருஷ்ணா சிங்கிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளார். அப்போது அவர் தன் மீது எந்த தவறும் இல்லை என்று தொடர்ந்து கூறி வந்துள்ளார். இதனால் அவருக்கு எதிரான ஆதாரங்களை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக திரட்டி வந்துள்ளனர்.
தற்போது அவர் செய்த குற்றங்கள் சிலவற்றிற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இதனால் அடுத்த மாதம் அவருடைய வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு விசாரணையில் காவல்துறையினர் ஆதாரங்களை சமர்பித்து குற்றத்தை நிரூபிக்க உள்ளனர். மருத்தவர் ஒருவர் 35 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க:திருவண்ணாமலையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோவில் கைது