திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ரஜினி என்பவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.  இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அப்பகுதியில் பதினோராம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவி வீட்டில் தனியாக உறங்கி கொண்டிருந்தார். அப்போது கூலித் தொழிலாளி ரஜினி சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோர்களிடம் இதுகுறித்து தெரியப்படுத்தினால் 1098 என்ற சைல்டு லைன் உதவி மையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.


இதனை அறிந்த சைல்டு லைன் உதவி மையத்தின் அலுவலர்கள் விரைந்து சென்று மாணவியை அழைத்து வந்து பெரும்பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்த்து தங்க வைத்துள்ளனர். அதனை தொடர்ந்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சைல்டு லைன் அலுவலர்கள் இதுகுறித்து புகார் அளித்தனர். அதன் பேரில் காவல் நிலைய ஆய்வாளர் அன்பரசி, பாலியல் தொல்லை கொடுத்த ரஜினி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். 


காதலிப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - இளைஞருக்கு 41 ஆண்டுகள் சிறை