தாயகம் திரும்புவ குறிப்பட்ட இடங்களில் ஒரு புதிய ஆலோசனையில், உக்ரைனின் கெய்வில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தியர்களை, குறிப்பாக ருமேனியா மற்றும் ஹங்கேரிய எல்லைகளுக்கு அருகில் வசிக்கும் மாணவர்களை வெளியேற்றுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சோதனைச் சாவடிகளில் ஒன்றுகூடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.


உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை இந்திய தூதரகம்  மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ரோமானியா, ஹங்கேரி எல்லைகளுக்கு அருகில் வசிக்கும்  இந்தியர்கள் அறிவிக்கப்பட்ட சில இடங்களில் ஒன்றுகூடுமாறு புதிய பயண அறிவுரையை வழங்கியுள்ளது.     


இதுகுறித்து உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், " உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பீதி அடையாமல் மன தைரியத்துடன் இருக்க வேண்டும்.  ரோமானிய மற்றும் ஹங்கேரி எல்லை வழியாக  இந்தியர்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை இந்திய அரசும், இந்திய தூதரகமும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தற்சமயம்,ஹங்கேரிய எல்லையருகே அமைந்துள்ள uzzhorod நகரில் அமைக்கப்பட்டுள்ள Chop- Zahony என்ற வெளியேறும் நிலையத்துக்கும் (Check Points, Evacuation Routes) , ரோமானியன் எல்லையருகே உள்ள Chernivtsi நகரில் அமைக்கப்பட்டுள்ள PORUBNE- SIRET என்ற வெளியேறும் நிலையத்துக்கும் இந்தியர்கள் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.      



உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள்மேலே குறிபிட்டப்பட்டுள்ள நிலையத்துக்கு வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மிகுந்த பாதுகாப்புடன், இந்திய வெளியுறவு அமைச்சக குழுக்களுடன் ஒருங்கிணைந்து நெறிமுறைப்படுத்தப்பட்ட  வகையில் (Organised Manner) வந்து சேர வேண்டும். இந்த மாற்று ஏற்பாடுகள் இறுதியானவுடன், இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படும். தாயகம் திரும்புவதற்கான பயணச் செலவுகளை ஏற்பாடு செய்து கொண்ட இந்தியர்கள்,  வெளியேறும் நிலையத்துக்கு பயணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். எல்லைகளைத் தாண்டி, தடையற்ற வகையில் பயணிக்க அந்ததந்த நிலையங்களில் அவசர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும். ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டவுடன்  தொலைபேசி எண்கள் பகிரப்படும். இதற்கு, தொடர்பு கொண்டு இந்தியர்கள் தங்களைப் பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டும். 


பயணங்கள் நெறிமுறைப்படுத்தப்பட்ட வகையில் அமைய, மாணவர்கள் அந்தந்த மாணவ ஒருங்கிணைப்பாளரை  தொடர்பு கொள்ள வேண்டும். மேலும், பாஸ்போர்ட், அத்தியவசியச் செலவுகளுக்கு தேவைப்படும் அமெரிக்க டாலர்கள் கையிருப்பு, கோவிட்- தடுப்பூசி சான்றிதழ் (இருந்தால்) ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லைப் பகுதிகளுக்கு பயணிக்கும்  வாகனங்களில் இந்திய மூவர்ணக் கொடியை ஒட்டிவைப்பது நல்லது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக, உக்ரைன் நாட்டின் டோன்பாஸ் கிழக்கு பிராந்தியம் மீது ரஷ்யா சிறப்பு ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இதனையடுத்து, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்கியுள்ள இந்தியர்கள், கீவ் நகருக்கு புறப்பட்டனர். ஆனால், இந்தியர்கள் தத்தம் இடங்களுக்கே உடனடியாக திரும்ப வேண்டும் என்று இந்திய தூதரகம் கோரிக்கை வைத்து வருகிறது. மேலும், உக்ரைன் நாட்டின் மேற்கு எல்லையை ஒட்டியுள்ள பத்திரமாக பகுதிகளுக்கு இவர்கள் செல்லலாம் என்றும் அறிவுறுத்தியிருந்தது. 


முன்னதாக, உக்ரைன் நாட்டின் வான்பரப்பு முழுவதும் மூடப்பட்டது. இதனையடுத்து, உக்ரைனில் உள்ள  இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வர, புதுடெல்லியில் இருந்து உக்ரைனுக்கு புறப்பட்டுச் சென்ற இந்தியன்  ஏர் லைன்ஸ் விமானம் மீண்டும் புதுடெல்லிக்கு திரும்பி வந்தது. இந்நிலையில், ரோமானிய, ஹங்கேரி போன்ற நாடுகள் வழியாக இந்தியர்களை அழைத்து வரும் மாற்று ஏற்பாடுகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 





உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் முழு அளவில் செயல்பட்டு வருவதாகவும், உக்ரைள் மற்றும் அதன் அண்டை நாடுகளில் உள்ள இந்திய தூதாகங்களுக்கு, ரஷ்ய மொழி அறிந்த அதிகாரிகள் கூடுதல் எண்ணிக்கையில் அனுப்பப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


உக்ரைன் நிலவரங்களை கருத்தில் கொண்டு, தேவை உள்ளவர்களுக்கு, தேனையான நகவல்கள் மற்றும் உதவிகளை வழங்க வெளியுறவு அமைச்சகம் புதுடெல்லியில், 24 மணி நோ கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்துள்ளது. 1800-11-8797 என்ற இலவச தொலைபேசி எண்ணில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம், அல்லது, situation room @ mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் இருந்து உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ள மாணவர்கள் மற்றும் பிறருக்கு உதவ தமிழக அரசும், உதவி மையம் ஒன்றை அமைத்துள்ளது. 044-28 51 5288 என்ற தொலைபேசி எண், அல்லது, nirtamils.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக, இந்த உதவி மையத்தை அணுகலாம் என்றும், தமிழக அரசு அறிவித்துள்ளது.