நாட்டில் சமீபகாலமாக குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அடிக்கடி நடைபெற்று வருவது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தற்போது பெங்களூரில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக 10 வயது சிறுமியை பள்ளி முதல்வரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


10 வயது சிறுமி:


பெங்களூரில் அமைந்துள்ளது குஞ்சூர். இந்த பகுதியில் பிரபலமான தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 10 வயதே ஆன சிறுமி ஒருவர் படித்து வருகிறார். டிஸ்லெக்சியா எனப்படும் அதிகளவு எழுத்துப்பிழை மற்றும் சிரமப்பட்டு படிக்கும் குறைபாடு உடைய அந்த சிறுமி 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.


இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அந்த சிறுமி பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்தது முதல் தனக்கு வயிறு வலிப்பதாக அந்த சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தாயார் சிறுமியை பரிசோதித்துள்ளார். அப்போது, சிறுமியின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வழிவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.


பள்ளி உரிமையாளர் செய்த கொடூரம்:


இதையடுத்து, சிறுமியை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, சிறுமியிடம் தாய் என்ன நடந்தது என்று கேட்டுள்ளார். அப்போதுதான் சிறுமியை அந்த சிறுமி படிக்கும் பள்ளியின் உரிமையாளரும், முதல்வருமான முதியவரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தெரிய வந்துள்ளது.


கடந்த வியாழக்கிழமை பள்ளியில் யாருமே இல்லாத வகுப்பறைக்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்ற அந்த 65 வயதான பள்ளி உரிமையாளர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லாமல் இருக்க வேண்டும் என்றும் சொல்லி கேக் அளித்துள்ளார். தனது மகளுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து அங்குள்ள வர்தூர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார்.


கைது:


இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அந்த பள்ளி முதல்வர் வேறு எந்த மாணவிகளையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாரா? என்பது குறித்து விசாரிக்கவும் பள்ளியின் கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பள்ளி அந்த பகுதியில் 13 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Crime: நெல்லையில் 2 நாட்களுக்கு முன் கொலையான இளைஞர்.. கைதான வாலிபர்கள் கொடுத்த வாக்குமூலத்தால் பரபரப்பு!


மேலும் படிக்க: Crime: பார்ட்டியில் நடந்த கொடூரம்.. தோழியின் காதலனால் நிகழ்ந்த வன்மம்.. கோவாவில் பயங்கரம்..