கல்லூரி மாணவி கொலை வழக்கில் அக்டோபர் 14 ஆம் தேதி சதீஷ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து,  நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதையடுத்து, கொலையாளி சதீஷை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கொலையாளி சதீஷ் தொடர்பான முந்தைய வழக்கு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.


முந்தைய வழக்கு:


கடந்த மே மாதம் 23 ஆம் தேதி, கல்லூரி வாயிலில், கல்லூரி மாணவியை தாக்கியது தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. மாணவியை கல்லூரிக்கு வெளியில் வைத்து தாக்கிய வழக்கில் சதீஷ் மீது வாய்தகராறு செய்ததாக சென்னை மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்த தகவல் வெளியாகியுள்ளது.


குற்ற சம்பவத்தின் பின்னணி


சென்னை கிண்டி அடுத்த ஆதம்பாக்கம் ராஜா மூன்றாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (23). இவர் ஓய்வு பெற்ற காவலரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அதே பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து,வரும் பெண் தலைமை காவலரின் மகள் சத்தியா (20), தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். 


சதீஷ் மற்றும் சந்தியா ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக நண்பராக பழகி வந்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் சதீஷ் மற்றும் சத்யா ஆகிய இருவரின், நட்பானது படிப்படியாக வளர்ந்து காதலாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி, இருவரும் மதியம் 1:30 மணி அளவில், பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்து உள்ளனர். அப்போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் ஆகியுள்ளது. அப்போது பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சதீஷ், சத்தியாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார்.

 

இதில் ரயிலில், சிக்கி சத்தியா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதை பார்த்த பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பகுதி மக்கள் உடனடியாக சதீஷை மடக்கி பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் சதீஷ் அங்கிருந்து பொதுமக்களை மிரட்டி விட்டு தப்பிச் சென்றார்.

 

இளம்பெண் சத்யாவை கொலை செய்த குற்றவாளி சதீஷை போலீசார் அக்.14 ஆம் தேதி கைது செய்தனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சதீஷை நேற்று போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

 

அதையடுத்து, கொலையாளி சதீஷை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கொலையாளி சதீஷ் தொடர்பான முந்தைய வழக்கு விவரம் வெளியாகியுள்ளது. மேலும் கொலையாளி சதீஷிடம், தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

 

சென்னை, பரங்கிமலையில் சத்யா என்ற கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.