Vignesh-Nayanthara : நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியின் குழந்தை விவகாரம் தொடர்பாக வீதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


சேலம் மாவட்டம் இரும்பாலை பகுதியில் உள்ள மருந்து கிடங்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியின் குழந்தை விவகாரம் தொடர்பாக வீதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார இணை இயக்குனரின் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டிக்கிறது. அந்த குழுவானது விசாரணை நடத்தி வருகிறது. 


நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி:
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இருவரும் ஐரோப்பிய நாடுகளுக்கு தேன் நிலவிற்கு சென்று திரும்பிய பிறகு, இருவரும் அவரவர் வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்தனர். நயன்தாரா குழந்தை பெற்றுக்கொள்ள போகிறார். அதனால் வேறு எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை போன்ற தகவல்கள் வெளியாகின. அந்த சமயத்தில் திடீரென கடந்த 9-ஆம் தேதி விக்னேஷ் சிவன் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன என்ற அதிகாரபூர்வமான தகவலை சோஷியல் மீடியா மூலம் அறிவித்து அதிர்ச்சி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது குறித்து ஏராளமான சர்ச்சைகள் எழுந்தன. திருமணம் முடிந்து 5 ஆண்டுகளுக்கு பிறகே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். திருமணமாகி சில மாதங்களே ஆன நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு விளக்கம் கேட்கப்படும் என ஏற்கனவே அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், தற்போது அவர் கூறியதாவது, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தேவையான விதிமுறைகள் அனைத்தும் முறைப்படி உள்ளதா என்பதையும் சரிபார்க்க நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதாக தெரிவித்துள்ளார்.  இவ்விவகாரம் தொடர்பாக முழு அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார்.