பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களிடையே ஏற்பட்ட நட்பு குறித்து கமல் விசாரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் ஜிபி முத்துவை கமல் கலாய்க்கும் காட்சிகள் இடம் பெற்ற நிலையில், 2வது ப்ரோமோவில் இப்படி ஒரு நபர் இந்த ஷோவில் இல்லாமலே இருந்திருக்கலாம் என யாரை நினைக்கிறீர்கள் என கேள்வி கேட்டு போட்டியாளர்களை அதிர வைத்தார் கமல்ஹாசன். இதனைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள 3வது ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டில் ஃப்ரண்ட்ஷிப் என்ன நிலைமையில இருக்கு என்ற கேள்வியை கமல் கேட்கிறார்.
அதற்கு விஜே மகேஸ்வரி எழுந்து கதிரவன் என்னை நட்புல இருக்குறதா சொன்னாரு. ஆனால் என்னை தவிர மற்ற எல்லோருடனும் நல்லா பேசுறாரு. ஆர் யு ஓகே என கேட்பாரு. நான் ஓகே சொல்லிட்டனா போய்டுவாரு என தெரிவிக்கிறார். இதேபோல் அமுதவாணன் எழுந்து ஜிபி முத்துவை சொல்கிறார். ஏனென்றால் நான் இங்க வந்து தான் அவர்கிட்ட முதல் தடவையா பேசுறேன். இப்ப என்னோட ஃப்ரண்ட்ஷிப்பே வேண்டாம்ன்னு சொல்ற அளவுக்கு இருக்கு என சொல்கிறார். இதற்கு பதிலளிக்கும் ஜிபி முத்து, அப்ப அப்ப என் மூச்சை வாங்குறாங்க. பேசியே கொல்றாங்க என தனக்கே உரிய பாணியில் தெரிவிக்க கமல் உட்பட அனைவரும் சிரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
களைக்கட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி
விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கியது.இதுவரை ஒளிபரப்பான 5 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்தாண்டு ஓடிடி தளத்திற்கென பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
எப்போதும் முதல் வாரம் அடக்கி வாசிக்கும் போட்டியாளர்கள் இந்த சீசனில் முதலிலேயே எகிற ஆரம்பித்ததால் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாக அமைந்தது. பஞ்சாயத்துகளும் நடந்ததால் வார இறுதியில் வரும் கமல் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அதில் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் பெரிதாக எந்த கறாரும் காட்டாமல் ஜாலியாகவே கொண்டு சென்றார்.