crime: ஒடிசாவில் இளைஞர் மிரட்டலுக்கு பயந்து 11 ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒடிசா மாநிலம் குத்ரா மாவட்டத்தின் பத்மாபூரில் உள்ள தனது வீட்டில் 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்று இரவு விஷம் குடித்துள்ளார். இதனை பார்த்த பெற்றோர் அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் நிராகர்பூர் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் ஒன்றை அளித்தார். 


அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கஜூரிபாடாவை பகுதியைச் சேர்ந்த ஷாசாப் சாஹா என்ற இளைஞர் தனது புகைப்படங்களை வைத்திருப்பதாகவும், அவற்றை சமூக வலைதளங்களில் பகிர போவதாகவும் தன்னை மிரட்டியதாகவும் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். மேலும், நான் கல்லூரிக்கு செல்லும் போது, தன்மேல் ஆசிட் அடிப்பதாகவும் அந்த இளைஞர் தன்னை மிரட்டியதாக மாணவி புகாரில் உள்ளதாக கூறப்படுகிறது.


மாணவி தற்கொலை செய்த செய்தியை அறிந்த இளைஞர் வெளியூருக்கு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் தொடர்புடைய அனைவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என குர்தா எஸ்பி தெரிவித்துள்ளார்.


ஷாசாப் என்ற இளைஞர் தலைமறைவாக உள்ள நிலையில் அந்த இளைஞரின்  தந்தை முர்தாசா சாஹா (55), தாய் பேகம் பீபி (45), சகோதரர் அர்ஷாத், சகோதரிகள் அப்சானா, அஸ்மா பேகம் மற்றும்  உறவினர் ரிஹானா பீபி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்களை அந்த இளைஞர் சமூக வலைதளங்களில் பகிரப்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அந்த சிறுமியின் தவறான புகைப்படங்கள் அந்த இளைஞரிடம் இருக்கிறதா? இல்லையா?  என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் குர்தா எஸ்பி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதேபோன்று நேற்று புதுச்சேரியில் தாய் கண்டித்ததால் 12 வயது பள்ளி மாணவி நெயில் பாலிஷ் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் தற்கொலை செய்து கொண்ட அந்த மாணவி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து, தகவல் அறிந்து வந்த தவளகுப்பம் போலீசார் மாணவி இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் நேற்று காலை தனது  அக்கா உடன் ஸ்ரீமதி சண்டையிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது தாய் மாணவியை கண்டித்துள்ளார், இதில் ஸ்ரீமதி காலை முதலே பள்ளியில் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்த நிலையில், மதியம் உணவு நேரத்தில் நெயில் பாலிஷ் அருந்தி தற்கொலை  முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மாணவியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைகாக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவிகள் மற்றும் ஊர் மக்களிடையே சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது. வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.





மாநில உதவிமையம் : 104




சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050