சேலம் மாவட்டத்தில் மாமியார்-மருமகன் இடையே ஏற்பட்ட தகராறு கத்தி குத்து வரை சென்றுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தின் கொண்டாலப்பட்டி பகுதியில் கிழக்கு வளவை சேர்ந்தவர் பச்சையம்மாள்(40). இவருக்கு பிரியதர்ஷினி என்ற மகள் இருக்கிறார். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வனுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. 


இந்த தம்பதிகள்  இருவருக்கும் இடையே சமீபத்தில் குடும்ப தகராறு ஏற்படுள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து இதுகுறித்து பிரியதர்ஷினி தன்னுடைய தாய் பச்சையம்மாளிடம் தெரிவித்து தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். மகளுடைய அழைப்பை ஏற்று பச்சையம்மாள் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அவருடைய  மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மாமியர் பச்சையம்மாளுக்கும் மருமகன் கலைச்செல்வனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 




ஒருகட்டத்தில் மருகமன் கலைச்செல்வன், “உன்னை போல் என் மனைவியையும் கெடுத்து விடாதே” என்று தன்னுடைய மாமியாரை திட்டியதாக தெரிகிறது. இந்த வார்த்தையை கேட்டு ஆத்திரம் அடைந்த மாமியர் பச்சையம்மாள் கலைச்செல்வனை இரும்பு பைப் மூலம் தலையில் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலால் கலைச் செல்வன் தலையில் ரத்தம் வடிந்துள்ளது. அப்போது பதிலுக்கு கலைச்செல்வன் தன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மாமியார் பச்சையம்மாளை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் இருவரும் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் இவர்கள் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


கலைச்செல்வனின் மாமியார் பச்சையமாளின் கணவர் சரவணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துள்ளார். இதன்காரணமாக அவர் வேறு நபரை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வருகிறார். இதைச் சுட்டிக்காட்டியதால் மருமகன் மீது மாமியார் பச்சையம்மாள் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அவர் ஆத்திரம் அடைந்து மருமகனை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளதாக தெரிகிறது. இவர்கள் இருவரின் மீதும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய மருத்துவ சிகிச்சைக்கு பிறகு காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவார்கள் என்று கருதப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் உள்ள கடையில் கேஸ் சிலிண்டரால் தீ விபத்து - அலறி அடித்து ஓடிய பொதுமக்களால் பரபரப்பு