திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் வேலூர் பேருந்து நிறுத்தம் அருகே ராதா என்பவருக்கு சொந்தமான பங்க் கடை மற்றும் டீ கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் உள்ளே கேஸ் அடுப்பை வைத்து விற்பனைக்கு தேவையான தின்பண்டங்களை தயாரிப்பார்கள். இந்தநிலையில் வழக்கம்போல் நேற்று பிற்பகல் 12.30 மணி அளவில் கடையின் உள்ளே கேஸ் அடுப்பில் விற்பனைக்கு தேவையான தின்பண்டங்களை சமையல் மாஸ்டர் ராமஜனும் தயாரித்து கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென கேஸ்  இருந்து அடுப்பிற்கு வரும் பழுப்பில் கசிவு ஏற்பட்டு  அடுப்பில் இருந்த தீ கேஸ் முழுவதும் பரவியுள்ளது. அடுப்பில் வைத்து இருந்த பாத்திரங்கள் மற்றும் தின்பண்டங்களை வைத்து இருந்த கவர்கள் முழுவதும் தீ பரவியது. உடனடியாக சமையல் மாஸ்டர் தீயினை அனைக்க முயற்சி செய்தார். ஆனால் அவரால் அனைக்க முடியவில்லை. உடனே கேஸ் வெடித்து விடுமோ என்ற  எண்ணத்தில் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தார்.



பின்னர் கடையில்  இவருடன் பணியில் இருந்த ஊழியர்கள் திடீரென தீ விபத்தால் அதிர்ச்சியடைந்தனர்.  அதன் பிறகு  கடையை விட்டு வெளியேறி ஓடிவந்தனர். அதனை தொடர்ந்து உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து கேஸ் சிலிண்டர் தீப்பிடித்து கடையில் உள்ள மற்ற பொருட்களுக்கும் தீ பரவியது. கடையின் உள்ளே மளமளவென தீ பரவியதால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடையின் உள்ளே மேலும் இரண்டு சிலிண்டர் இருப்பதால் அக்கம்பக்கத்தில் இருக்கும் கடைக்காரர்கள் மற்றும் கடை ஊழியர்கள் யாருமே உள்ளே செல்லாமல் வெளியிலேயே நின்றிருந்தனர். அதன் பின்னர் அரை மணி நேரம் தாமதமாக பேருந்து நிலையத்திற்கு வந்த தீயணைப்பு வாகனம் தண்ணீரை பீச்சி அடித்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



அதன் பிறகு மாவட்ட கூடுதல்  காவல்கண்காணிப்பாளர் கிரன்சுருதி சம்ப இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிற்பகலில் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் பயணிகள் பரபரப்பாக இருக்கக்கூடிய  பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடையில் கேஸ் சிலிண்டர் தீப்பற்றி எரிந்ததால் பேருந்து நிலையம் பரபரப்பானது பேருந்துக்காக  காத்திருந்த பயணிகள் சிலிண்டர் வெடித்து விடுமோ என்ற பயத்தில் பீதியடைந்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Watch Video: 'டிப் டிப் பர்சா பானி', பாடலுக்கு நடனம்: வீடியோவில் இருப்பது பாகிஸ்தான் எம்பியா? வைரல்