கொரோனா நோய்த்தொற்றுப் பரவலை தடுக்கும் விதமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நேரடி விசாரணை தடைசெய்யப்பட்டு, காணொலி வாயிலாக மட்டுமே வழக்கு விசாரணை நடைபெற்றது. கடந்த ஆறு மாதங்களாக நேரடி மற்றும் காணொலி வாயிலாகவும் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன.  ஜனவரி 3-ஆம் தேதியில் இருந்து முழுமையாக நேரடியாக மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட்டது.



கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை கருத்தில் கொண்டு, நேரடி விசாரணை முழுவதுமாக தடை செய்யப்பட்டு காணொலி வாயிலாக மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி, அவரது உறவினர், மதுரைக்கிளை ஊழியர்கள் 7 பேர் என மொத்தம் 9 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 


திமுக அரசை அவதூறாக பேசியதாக ஜார்ஜ் பொன்னையா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் 3 பிரிவுகள் ரத்து

 

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், "ஜூலை 18 ஆம் தேதி அருமனை பகுதியில்  உயிரிழந்த ஸ்டேன் ஸ்வாமியின் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.  அந்த கூட்டத்தில் பேசியபோது அரசியல் கட்சி தலைவர்களையும் அரசுகளுக்கு எதிராக பேசியதாகவும்,  என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 18ஆம் தேதி நடைபெற்ற கூட்டம் முறையாக காவல் ஆணையரின் அனுமதி பெற்றே நடைபெற்றது. சட்டவிரோதமாக கூட்டம் நடைபெறவில்லை. நான் பேசிய விவரங்கள் வேண்டுமென்றே குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்டுள்ளது. இதற்கு வருத்தம் தெரிவித்து ஜூலை 20ஆம் தேதி மற்றொரு வீடியோவையும் வெளியிட்டுள்ளேன். இதயநோய் உட்பட பல்வேறு உடல் உபாதைகளுடன், வயது முதிர்வாகவும் இருப்பதால் அவற்றைக் கருத்தில் கொண்டு தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 



 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், " நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்து பூதங்களும் புனிதமாக பார்க்கப்படுகின்றன. நிலம் பூமாதேவி என்றும் புண்ணிய பூமி என்றும் வணங்கப்பட்டுள்ளது. அருமனையில் நடைபெற்ற கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தற்போதைய திமுக அரசையும், மோடி மற்றும் அமைச்சரவையும் அவதூறாக பேசியுள்ளார். இதில் அவர் மீது 143, 269, 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே அந்தப் பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன. ஆனால் மத உணர்வுகளை புண்படுத்துதல், இரு குழுக்களுக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக செயல்படுதல், பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது ஏற்கத்தக்கதே எனக்குறிப்பிட்டு, 3 பிரிவுகளை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.