மத்தியப் பிரதேசத்தின் சாகரில் உள்ள ஒரு பள்ளியில் ஒரே சிரிஞ்ச் மூலம் 30 குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட்ட நர்சிங் மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


சாகர் நகரில் உள்ள பள்ளியில் சமீபத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. இதில் நர்சிங் கல்லுாரி மாணவர் ஜிதேந்தர் அஹிர்வார் தடுப்பூசி செலுத்த நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது, ஒரே ஊசியை பயன்படுத்தி, 39 மாணவர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தினார்.


இது குறித்த புகாரின் அடிப்படையில் வழக்கு என்றார். பதிவு செய்த போலீசார், இது தலைமறைவாக இருந்த ஜிதேந்தரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இதற்கிடையே, ஜிதேந்தர் அஹிர்வார் வெளியிட்டுள்ள 'வீடியோ'வில், ”என் துறைத் தலைவர் தான் என்னிடம் ஒரே ஒரு சிரிஞ்ச் கொடுத்தார்கள், அதை வைத்தே தடுப்பூசி போடச் சொன்னார்கள். அதனால்தான் ஒரே சிரிஞ்சில் இருந்து 30 குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டேன்" என்றார்.






இது தொடர்பாக சுகாதாரத் துறை மற்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், இதுகுறித்து பேசிய CMHO டி.கே.கோஸ்வாமி, "எங்களுக்கு புகார் கிடைத்தது, விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இந்த சம்பவத்துக்கு பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். 


கொரோனா தடுப்பூசி நாடு முழுவதும் மொத்த எண்ணிக்கை கடந்த புதன்கிழமை 203.17 கோடியைத் தாண்டியுள்ளது. நேற்று முன் தினம் இரவு 7 மணி வரை 36 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


மேலும், 18-59 வயதுடையவர்களுக்கு மாலை 7 மணி வரை 26,32,026 முன்னெச்சரிக்கை டோஸ்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்த வயதினருக்கு வழங்கப்பட்ட மொத்த முன்னெச்சரிக்கை டோஸ்கள் இதுவரை 3,15,54,701 ஐத் தாண்டியுள்ளதாக அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு இதுவரை 3.15 கோடி தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 


இதுவரை, 12-14 வயதுக்குட்பட்ட 3.87 கோடி குழந்தைகளுக்கு முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 15-18 வயதுக்குட்பட்ட 6.10 கோடிக்கும் மேற்பட்ட இளம் பருவத்தினருக்கு முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண