மகாராஷ்ட்ராவில் மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ளது தனியார் பள்ளி ஒன்றில் 15 வயது சிறுமி ஒருவர் 10ம் வகுப்பு படித்து வந்தார். இதே பள்ளியில் 35 வயது மதிக்கத்தக்க நபர் பள்ளியின் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி தினமும் பள்ளியின் பேருந்தில் சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.


இந்த பேருந்தை அந்த 35 வயது மதிக்கத்தக்க நபர்தான் வழக்கமாக ஓட்டிச்சென்றுள்ளார். பள்ளிப் பேருந்தின் ஓட்டுனர் என்பதால் அந்த சிறுமிக்கு ஓட்டுனர் நன்று பரிச்சயமான நபராக இருந்துள்ளார். 10ம் வகுப்பு மாணவி பள்ளி முடிந்ததும் டியூசன் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.




இந்த நிலையில், சம்பவத்தன்று அந்த மாணவியை காண்பதற்கு டியூசன் சென்றுள்ளார். அங்கு டியூசன் ஆசிரியர்களிடம் சில காரணங்களை கூறி மாணவியை அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். பின்னர், மாணவியை கட்டாயப்படுத்தி அங்கிருந்த பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். மாணவி இங்கு ஏன் அழைத்து வருகிறீர்கள்? என்று கேட்டும் அவர் கட்டாயப்படுத்தி மாணவியை அழைத்துச் சென்றுள்ளார்.


மேலும் படிக்க : பாலத்தில் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து; 12 பேர் உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்!


அங்கு சிறுமி என்றும் பாராமல் 10ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை தன்னுடைய பெற்றோர்களிடம் கூறியுள்ளார். பின்னர், அவர்கள் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுனர் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைச் சட்டமான போக்சோ உள்பட பல்வேறு வழக்குப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.




10ம் வகுப்பு படிக்கும் மாணவியை அந்த பள்ளியின் பேருந்து ஓட்டுனரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் மற்ற மாணவர்களும், பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


மேலும் படிக்க : அமளிக்கு நடுவில் குடியரசு தலைவர் தேர்தல் : வாக்களிக்க வந்த ஓபிஎஸ்சை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்!


மேலும் படிக்க : Manmohan Singh: குடியரசுத் தலைவர் தேர்தல்: சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண