குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (Manmohan Singh) சக்கர நாற்காலியில் வருகை தந்தார்.


15ஆவது குடியரசுத் தலைவர் யார்?


நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் இன்று (ஜூலை.18) ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.


தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24ஆம் தேதி நிறைவடைகிறது.


இந்நிலையில், அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். 


வாக்களித்த மன்மோகன் சிங்


இந்நிலையில், சமீபத்தில் உடல்நலக்குறைவிலிருந்து மீண்ட 89 வயதான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சக்கர நாற்காலியில் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்து வாக்களித்தது காங்கிரஸ் கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


 






மேலும், சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இரண்டு முறை பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங், உடல் நலிவடைந்து சக்கர நாற்காலியில் வருகை தந்தது பலரையும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.


 






இன்று மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ஆகஸ்ட் 6ஆம் தேதி குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண