மத்திய பிரதேச மாநிலத்தின் நர்மதை ஆற்றில் புனே சென்றுகொண்டிருந்த பேருந்து பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்து 12 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.


நர்மதை ஆற்று பாலத்தில் இந்தோரில் இருந்து புனே நகருக்கு சென்றுகொண்டிருந்த பேருந்து நர்மதை ஆற்றில் விழுந்தது. ஆற்றில் நீரோட்டம் அதிகம் இருப்பதால், மீட்பு பணி சற்று சவாலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 




இந்த விபத்தில் 12 பேர் உயிரிழதிருப்பதாகவும், 15 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.






மாநில பேரிடர் மீட்புக் குழு (state disaster response force (SDRF) மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேருந்தில் மொத்தம் எத்தனை பயணிகளை இருந்தனர் என்பது பற்றிய தகவல் ஏதும் இன்னும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த விபத்திற்கு மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் செளகான் (Shivraj Singh Chouhan) இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இந்த விபத்தில் செய்தி வேதனையளிக்கிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்து வசதிகள் செய்து தரவும், மீட்பு பணிகள் குறித்தும் கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.









பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்:






இதற்கு பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விபத்து மிகவும் வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.