கொழுந்தனார் தான் குளித்துக் கொண்டிருந்தபோது ரகசியமாக படம்பிடித்ததாக பெண் ஒருவர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஹிஞ்சேவாடியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில், பர்பானி மாவட்டத்தைச் சேர்ந்த குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
25 வயது கொழுந்தனார் தான் குளித்துக் கொண்டிருந்த போது, தனக்குத் தெரியாமல் படம் எடுத்ததாக அப்பெண் கூறினார். பின்னர், அந்த வீடியோவை பயன்படுத்தி, அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. தனது பாலியல் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்ததால் அந்த நபர் பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றுள்ளது. ஆனால் அப்பெண் தன்னை துன்புறுத்தத் தொடங்கும் வரை எதையும் வெளிப்படுத்தவில்லை.
அந்த பெண், மீண்டும் துன்புறுத்தப்பட்டதையடுத்து, தனது கணவரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை குறித்து கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து, கணவர் காவல் நிலையத்தில் புகார் கூறினார். இதனை அறிந்துக்கொண்ட குற்றம்சாட்டப்பட்ட நபர் சொந்த ஊருக்குத் தப்பிச் சென்ற நிலையில், அவர் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டது.
"இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376 (பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை) மற்றும் 323 (தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காக தண்டனை) ஆகியவற்றின் கீழ் நாங்கள் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம்" என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். தம்பியே அண்ணனின் மனைவியை குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்