இந்நிலையில் இன்று காலை தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டுக்கு பின் புதைக்கப்பட்டிருந்த, 24 வார பெண் சிசுவின் உடலை நாய் ஒன்று கவ்வி சென்றுள்ளது. தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நாயிடம் இருந்து சிசுவை மீட்டனர். ஆனால் அந்த சிசுவுக்கு ஒரு கை பாதி இல்லாமல் இருந்தது. இது நாய் கடித்துவிட்டதா? இல்லை குறை பிரசவமாக இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து தருமபுரி கிராம நிர்வாக அலுவலர் நாராயணன் கொடுத்த புகாரின் பேரில், தருமபுரி நகர காவல் துறையினர் சிசுவின் உடலை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உள்ள பிரோத பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிசுவை புதைத்தவர்கள் குறித்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், மற்றும் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சிசுவின் உடலை நாய் கவ்விச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.