கொரோனாவுக்கு பிற்பாடான பிரச்சனையாக ஆரோக்கியமானவர்களுக்கு சர்க்கரைநோய், வாசனையை நிரந்தரமாக இழத்தல் என்ற வரிசையில் முடி உதிர்தலும் இடம்பெற்றுள்ளது. பலரும் கொரோனாவுக்குப் பிறகுதான் முதல்முறையாக முடி உதிர்வு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். நோய் பாதிப்புடன் வேலையிழப்பு, பொருளாதார சிக்கல் தொடர்ச்சியாக ஏற்படும் பல்வேறு பிரச்னைகளும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. மன அழுத்தத்தின் காரணமாக முடி உதிர்வு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா தொற்றுக்கும் முடி இழப்புக்கான தொடர்பு தற்போது ஆராயப்பட்டு வருகிறது. நீங்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறீர்கள் எனில் அது முடி உதிர்தலை கடுமையாக பாதிக்கும். எனவே மன நல சிகிச்சை, தியானம் அல்லது யோகா போன்ற மன அழுத்தத்தை சரி செய்யும் முறைகளை முயற்சிக்கவும். சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கொண்ட சீரான உணவை உண்ண வேண்டும். உங்கள் உணவில் கோழி, மீன், இலை காய்கறிகள், முட்டை மற்றும் வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களை சேர்த்துக்கொள்ள மறக்க வேண்டாம். நல்ல செய்தி என்னவென்றால், கொரோனாவால் முடி உதிர்தல் நிரந்தரமானது அல்ல, அது மீண்டும் வளரும். இந்த நிகழ்வு டெலோஜென் எஃப்ளூவியம் என்று அழைக்கப்படுகிறது.
ஆயுர்வேத நிபுணரான டாக்டர் ரேகா ராதாமோனி கூறுகையில், "கோவிட்டுக்கு பிறகான முடி உதிர்தலுக்கு சுமார் 90% டெலோஜென் எஃப்ளூவியம் எனப்படும் ஒரு நிலை காரணமாகும். உடல் ஒரு கட்டத்தில் உணர்ச்சி மன அழுத்தத்திற்கு ஆளாகும் போதெல்லாம், அது ஏற்படலாம். டெலோஜென் எஃப்ஃப்ளூவியம் என்ற நிலைக்கு இட்டுச் செல்கிறது. நல்ல செய்தி என்னவென்றால், இது மீளக்கூடிய முடி உதிர்தல் மற்றும் முடி மீண்டும் வளரும், ஆனால் அதன் முழுமைக்கு திரும்ப சிறிது நேரம் ஆகலாம்." என்று கூறினார்.
அதனை விரைவாக திரும்ப பெறுவதற்கு டெர்மடாலஜிஸ்ட்டை அணுகலாம், இல்லையென்றால் பெரும்பாலும் வீட்டிலே நாமே செய்யக்கூடிய ஐடியாக்கள் கொடுக்கப்படுகின்றன. ஆம்லா பவுடர்களும், தேங்காய் எண்ணெய்களும் இந்த வித்தையை செய்கின்றன என்று பெரும்பாலானோர் தெரிவிக்கின்றனர்.
நம் பாட்டி காலத்திலிருந்தே குளிர்காலத்தில் குளிரைத் தடுக்கும் கவசமாகச் செயல்படும் இந்த நெல்லிக்காய் பவுடன் என்னும் மூலப்பொருள், ஒரு சிறந்த ஹேர் டானிக்காக செயல்படுகிறது. இது கூந்தலுக்கு இயற்கையான பிரகாசத்தை சேர்க்கிறது, முடியின் அடி பாகத்தில் நேரடியாக வேலை செய்வதன் மூலம் அவற்றை சீராக வைத்திருக்கிறது, சேதமடைந்த முடியை நிலைநிறுத்துகிறது மற்றும் அவற்றை பளபளப்பாக மாற்றுகிறது. இதை உணவில் சேர்த்துக் கொண்டால் உள்ளிருந்து செயல்படுகிறது.
வைட்டமின் சி நிறைந்த இந்த நெல்லிக்காய் தூள் தலைமுடியை பலப்படுத்தி ஊட்டமளிக்கிறது. அதுமட்டுமல்லாமல், சேதமடைந்த முடியை கண்டிஷனிங் செய்வதோடு, பளபளப்பாகவும், சேதமடையாமல் இருக்கவும் உதவுகிறது. இந்த தயாரிப்பில் பதப்படுத்தப்படும் கெமிக்கல் சேர்க்கைகள் இல்லை. உணவோடு ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.
புதிய தேங்காய் பால் கொண்டு, 100% இயற்கையாக குளிர் அழுத்தம் தரப்பட்டு, சுத்திகரிக்கப்படாத எண்ணெயில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது. தோல் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கு பயன்படுத்துவதலாம், இல்லையெனில் சமையலுக்கும், உணவுப் பொருளாகவும் பயன்படுத்தினால் போதும். இது முடி உதிர்வை தடுத்து, பொடுகை கட்டுப்படுத்துகிறது மற்றும் முடியை பலப்படுத்துகிறது.
ஏற்கனவே பார்த்ததுபோல் மற்றொரு தேங்காய் எண்ணெயும் உள்ளது, இது 100% தூய்மையான, குளிர் அழுத்தப்பட்ட வெர்ஜின் ஆயில் ஆகும். இந்த எண்ணெய் உலர்ந்த அரிப்பு உச்சந்தலையில் ஒரு நல்ல மாய்ஸ்சரைசர் மற்றும் ஒரு கண்டிஷனராக செயல்பட்டு, பொடுகு குறைப்பதில் வேலை செய்கிறது, தோல் ஒவ்வாமை மற்றும் தடிப்புகளை எதிர்த்துப் போராடுகிறது. இந்த வெர்ஜின் தேங்காய் எண்ணெய் முடி மெலிதல், முடி உதிர்தல் ஆகியவற்றிற்கும் உதவுகிறது.