புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே இந்திராநகர் ஈஸ்வரமூர்த்தி ஊரணி முதல் தெருவை சேர்ந்தவர் முகமது ஹனிபா. இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். 2 மகன்கள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். ஒரு மகன் உள்ளூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 31-ந்தேதி உறவினரின் இல்ல துக்க நிகழ்ச்சிக்காக முகமது ஹனிபா குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டம், சிறுகுடிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர்கள் அனைவரும் நேற்று மாலை வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த முகமது ஹனிபா வீட்டின் உள்ளே சென்றுபார்த்தார். அப்போது அங்குள்ள ஒரு அறையில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 47 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பொன்னமராவதி காவல்துறைக்கு முகமது ஹனிபா தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில், பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், பொன்னமராவதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டின் பூட்டை உடைத்து 47 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களில் தொடர் கொள்ளை, கொலை சம்பவங்கள் நடைபெற்றதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருந்து வருவதாக காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்னம் உள்ளது. இதனால் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து 24 மணி நேரமும் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் ரோந்து பணியில் உள்ளனர். ஆகையால் பொதுமக்கள் அச்சபட தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர்களை கண்டறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய மண்டல ஐ.ஜி.சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் சந்தேகம்படும்படி நபர்கள் கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.  




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண