புதுச்சேரியில் தனியார் பள்ளியில் டோனி வளவன் என்பவர் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தாவரவியல் பாடம் எடுத்து வருகிறார். இவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு கடந்த ஒன்றை மாதமாக ஆபாச படங்கள், ஆபாச குறுஞ்செய்தி, மற்றும் ஆபாச பட இணைப்புகள் அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
மேலும், மாணவிக்கு பெற்றோர் இல்லாததால், தான் தங்கி இருந்த உறவினரிடம் மாணவி கூறியுள்ளார். மாணவியின் உறவினர்கள் மற்றும் சக பள்ளி மாணவர்களுடன் இன்று குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் அளித்துள்ளனர். குழந்தைகள் நல அமைப்பினர் முதலியார்பேட்டை காவல் நிலையத்திற்கு இந்த புகாரை பரிந்துரை செய்து விட்டு சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த பல்வேறு சமூக அமைப்பினர் பள்ளியின் முதல்வரை முற்றுகையிட்டு சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த முதலியார்பேட்டை காவல் ஆய்வாளர் இனியன் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்தை நடத்தி சமாதானப்படுத்தி இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்து விடுவதாக உறுதியளித்தனர். மேலும், பாலியல் தொல்லை புகாருக்கு ஆளாகி தலைமறைவாக இருந்த ஆசிரியரை கண்டமங்கலம் பகுதியில் காவல்துறையினர் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவி அளிக்கும் வாக்குமூலத்தை வைத்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: Mayiladuthurai Kidnap: மயிலாடுதுறையில் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய கும்பல் - அதிர்ச்சி வீடியோ..!
மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் கூறியதாவது:- பள்ளியில் மாணவிக்கு நடந்த பாலியல் தொந்தரவு தெரிந்தே, பள்ளி முதல்வர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்காமல் மூடி மறைத்து இருந்திருக்கிறார். எனவே இன்று மாலைக்குள் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்வதோடு ஆசிரியரை காப்பாற்றும் பள்ளியின் முதல்வர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்படி இல்லாத பட்சத்தில் புதுச்சேரியில் உள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களை ஒன்றிணைத்து இந்த பள்ளிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என எச்சரித்துள்ளார்.
Thangam Thennarasu : ஈபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு எச்சரிக்கை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்