கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள இனயம்புத்தன்துறையை சேர்ந்தவர் ஜான் கில்பர்ட். இவரது மகன் கில்சன் (வயது 21), மீனவர். இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த விஜயன் என்பவரது பைபர் படகில் கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதியில் மீன்பிடிக்க சென்றார். இவருடன் மேலும் 4 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கனமழை எச்சரிக்கை விடப்பட்டதால் கடலுக்குள் சென்ற மீனவர்கள் அனைவரும் உடனே கரை திரும்ப வேண்டும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கில்சனும் அவருடன் சென்ற மீனவர்களும் படகை கரையை நோக்கி திருப்பினர். கரையின் அருகே வந்த போது படகு ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்தது.

 



 

இதில் படகில் இருந்த கயிறு கில்சனின் காலில் சுற்றியதால் அவரால் நீந்த முடியாமல் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அவருடன் சென்றிருந்த 4 பேரும் நீந்தி கரை சேர்ந்தனர். இதுகுறித்து சக மீனவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீனவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்பு நேற்று மாலையில் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 




 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் காதலை நிரூபிக்க தனது காதலியிடம் மார்பில் பச்சை குத்த கேட்டு டார்ச்சர் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

 



 

 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் பூக்கடை நடத்தி வரும் 28 வயதான இளைஞர் அபினேஷ். இவர் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் செவிலியர் கல்லூரியில் படிக்கும் பெண்ணை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார். காதல் ஜோடிகள் தங்கள் காதலை பல இடங்களுக்கு சென்று வளர்த்து வந்த நிலையில் அபினேஷ்க்கு தனது காதலி உண்மையாக தன்னை காதலிக்கிறாளா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக தற்போது உள்ள காதலில் கேரண்டி மற்றும் வாரண்டி எல்லாம் இல்லாத நிலையில் , காதலியிடம் என்னை விட்டு செல்லமாட்டாய் என்பதை நீ எனக்கு உறுதி அளிக்கவேண்டும் என தொடர்ந்து கேட்டுகொண்டே இருந்துள்ளார். இந்த விவகாரத்தில் சற்று சந்தேகம் முத்திப்போன அபினேஷ் உண்மையில் என்னை காதலிப்பதாக இருந்தால் என் பெயரை உனது மார்பகத்தில் நீ பச்சை குத்தி கொள்ள வேண்டும் என கூறி உள்ளார். இதனை கேட்ட பெண் காமெடி செய்யாதே போடா என செல்லமாக கூறிய நிலையில், அபினேஷ் இந்த விவகாரத்தில் உறுதியாக இருந்துள்ளார் இதன் காரணமாக இருவருக்கும் இடையே தொடந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் அபினேஷ் தொடர்ந்து பச்சை குத்த டார்ச்சர் செய்ததை பொறுக்க முடியாத இளம்பெண் இந்த சம்பவத்தை தன் தந்தையிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த பெண் இது சம்பந்தமாக தந்தையுடன் சேர்ந்து மார்தாண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் அபினேஷ் ஐ கைது செய்து சிறையில் அடைத்தனர்.