நடிகை ப்ரணிதா தனது கணவருக்கு பாதபூஜை செய்த புகைப்படம் சமூகவலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். 


அவர் அளித்துள்ள விளக்கத்தில் “நான் ஒரு நடிகை என்பதற்காக எனக்கான சடங்குகளை நான் தொடரக்கூடாது என்று அர்த்தம் இல்லை. நான் அதனை முழுமையாக நம்புகிறேன். ஒருவர் முன்னோக்கி சிந்தித்து நவீன காலத்திற்கு ஏற்ப இருக்கலாம். ஆனால் அதற்தாக வேர்களை மறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை” என்று குறிப்பிட்டு இருக்கிறார். 


முன்னதாக,தமிழில் கார்த்தியுடன்  ‘சகுனி’ சூர்யாவுடன் ‘மாஸ் என்கிற மாசிலாமணி’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பிரணிதா. இவர் கடந்த ஆண்டு பெங்களூர் தொழிலதிபர் நித்தின் ராஜூவை திருமணம் செய்து கொண்டார். அதனைத்தொடர்ந்து தனது கணவரின் பிறந்தநாளில் கர்ப்பமான செய்தியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த ப்ரணிதா தொடர்ந்து தனது கர்ப்பகால புகைப்படங்களையும், அது தொடர்பான தனது கருத்துக்களையும் தொடர்ந்து பகிர்ந்து வந்தார்.


 






இந்த நிலையில் அவர் அண்மையில் பெண் குழந்தையை பிறந்தது. அது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அவர் மருத்துவர்களுக்கு நன்றி கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் பீமா அமாவாசையன்று தனது கணவருக்கு பாத பூஜை செய்திருந்தார்.


 






பொதுவாக அந்த ஊர் வழக்கப்படி திருமணமான பெண்கள் பீமா அமாவாசை தினத்தில் கணவருக்கு பாதபூஜை செய்வது வழக்கமாம். அந்த வழக்கத்தின் படியே, அவர் இதனை செய்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். 


இந்த போட்டோவை பார்த்த இன்ஸ்டாவாசிகள் சிலர் மாடர்ன் பெண்ணாக இருந்தாலும் வழக்கத்தை கடைபிடிக்கிறாரே என பாராட்டினர். இன்னொரு தரப்பினரோ வழக்கமாவே இருந்தாலும் இதெல்லாம் மாற்றப்பட வேண்டிய ஒன்று என்றும், பிரணிதா போன்ற படித்தவர்கள் இதனை தவிர்த்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டனர்.  இந்த நிலையில் அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.