புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 300-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட தாடி அய்யனார் தலைமையில் நேற்று காலை விசாரணை கைதிகள் 25-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு பீடி, சிகரெட் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரை மணி நேர கேப்.. ஒரே கும்பல்.. அடுத்தடுத்து இரண்டு கொலை.! செங்கல்பட்டை அதிர வைத்த சம்பவம்!
இது பற்றி தகவல் அறிந்தவுடன் சிறைத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதற்கிடையே கைதிகளில் சிலர் ஆணிகளை விழுங்கி விட்டதாக கூறிக்கொண்டு கட்டிடத்தின் மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அதிகாரிகள் கட்டிடத்தில் இருந்து கீழே இறங்கும்படி வலியுறுத்தினர். மேலும் அவர்களை பிடித்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது சிறை வார்டன்களுக்கும், கைதிகளுக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் 4 சிறை வார்டன்கள் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கனக செட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுவை காலாப்பட்டு சிறையில் 11 கைதிகள் தற்கொலை முயற்சி- ஆணிகளை விழுங்கியதால் பரபரப்பு...!
இந்த நிலையில் சிறையில் ஏற்பட்ட அசாதாரண சூழல் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் போலீஸ் டி.ஜி.பி.க்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே டி.ஜி.பி. உத்தரவின் பேரில் கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு தீபிகா மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளிடம் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு நேற்று இரவு உணவு சாப்பிட்டனர். இதனால் காலாப்பட்டு மத்திய சிறையில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்