பாகிஸ்தான் நாட்டில் பெண்கள் படித்திருந்தாலும் அவர்கள் மிகுந்த உயர் பதவி வருவது கடும் சிரமமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் உருவாகியதில் இருந்து, அந்த நாட்டு உச்சநீதிமன்றத்திற்கு பெண் ஒருவர் முதன்முறையாக நீதிபதியாக நியமிக்க அந்த நாட்டின் நீதிமன்ற உயர் அதிாரக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
லாகூர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆய்ஷா மாலிக் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க பாகிஸ்தானின் நீதி ஆணைய உயரதிகாரக் குழு தலைவர் குல்சார் அகமது ஒப்புதல் அளித்துள்ளார். பாகிஸ்தானின் நீதி ஆணையத்தின் ஒப்புதலுக்கு பிறகு, பாகிஸ்தானின் நாடாளுமன்ற குழுவால் அவரது பெயர் பரிசீலிக்கப்படும்.
ஆயிஷா மாலிக்கின் பெயரை பாகிஸ்தான் நீதி ஆணையம் இரண்டாவது முறையாக பரிந்துரைத்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்காமல் நிராகரித்துவிட்டனர்.
சீனியாரிட்ட பிரச்சினை காரணமாக, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அவரது பதவி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் அப்துல் லத்தீப் அப்ரிடி நாட்டில் உள்ள 5 உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளை காட்டிலும் ஆயிஷா மாலிக் இளையவர் என்றும், அவரை நியமித்தால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இந்த முறையும் பாகிஸ்தானின் நீதி ஆணையம் அவரது பெயரை பரிசீலித்தால், நீதிமன்றங்களை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் பார் கவுன்சில் மிரட்டியது. இருப்பினும் அவரது பெயரை பாகிஸ்தானின் நீதி ஆணையம் உச்சநீதிமன்ற நீதிபதி பெயருக்கு பரிந்துரைத்துள்ளது.
ஒருவேளை, அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு நாட்டின் முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதியாக பொறுப்பேற்றால் அவர் 2031ம் ஆண்டு அவரது ஓய்வுக்காலம் வரை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார். இந்த முறை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டால் 2030ம் ஆண்டு அவர் பாகிஸ்தானின் முதல் உச்சநீதிமன்ற பெண் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவும் வாய்ப்பு உள்ளது.
தற்போது, ஆயிஷா மாலிக்க பாகிஸ்தானின் லாகூர் உயர்நீதிமன்றத்தில் சீனியாரிட்டி அடிப்படையில் நான்காவது இடத்தில் உள்ளார்.
மேலும் படிக்க : Today Headlines: தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா! தெ.ஆ.டெஸ்ட் இந்தியா தோல்வி..! முக்கியச் செய்திகள் சில!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்