அதிமுக பிரமுகரின் கழுத்தில் கத்தியை வைத்து 80 சவரன் நகை, ரூ. 38 லட்சம் பணம் கொள்ளை

புதுச்சேரி : அதிமுக பிரமுகரின் கழுத்தில் கத்தியை வைத்து, 80 சவரன் நகை மற்றும் 38 லட்சம் பணம் கொள்ளை

Continues below advertisement

புதுச்சேரி: புதுச்சேரியில் அதிமுக பிரமுகரின் கழுத்தில் கத்தியை வைத்து, 80 சவரன் நகை மற்றும் 38 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

புதுச்சேரி ரெயின்போ நகர் 6வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் கருணாநிதி, (வயது 60) அதிமுக நிர்வாகி. இவர், நேற்றிரவு 8:30 மணி அளவில் வீட்டின் எதிரே நின்று கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த 3 நபர்கள் அவரிடம் முகவரி கேட்டு விசாரித்தனர். அதற்கு கருணாநிதி பதிலளித்த போது, 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை அவரது கழுத்தில் வைத்து, அவரது வீட்டின் முதல் மாடிக்கு அழைத்து சென்றனர். வீட்டின் பீரோவில் இருந்த ரூ. 38 லட்சம் பணம் மற்றும் 80 சவரன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர்.

தகவலறிந்த கிழக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் ஸ்வாதி சிங், பெரியகடை காவல் ஆய்வாளர் நாகராஜ், உதவி காவல் ஆய்வாளர் வீரபத்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்து சென்ற நபர்களை தேடி வருகின்றனர். வீட்டில் இருந்த சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை பார்வையிட்டு, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ரெயின்போ நகரில் அதிமுக பிரமுகரின் கழுத்தில் கத்தியை வைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola