மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் உயர்நிலைப் பள்ளியில்  மாணவிகள் கழிவறையில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளதை கண்டித்து பள்ளி முதல்வரை பெற்றோர்கள் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெறுவதால் பள்ளி மறு அறிவிப்பு வரும்வரை (இன்று முதல்) செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


புனேவில் உல்ள தாலேகாவுன் என்ற பகுதியில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. அங்குள்ள மாணவிகள் கழிவறையில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. மாணவிகள் பயன்படுத்தும் கழிவறையில் இப்படி கேமரா பொருத்தப்பட்டுள்ளதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். மாணவிகள் கழிவறையில் இருந்து சி.சி.டி.வி. கேமராவை அகற்றுமாறு கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், தொடர்ந்து இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் மாணவர்களின் பெற்றோர்கள் ஏமாற்றத்துடன் அதிர்ச்சியடைந்தனர். இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால், பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளதாதால்,  விஷ்வா இந்து பரிஷத் அமைப்பு தலையிட்டு, பெற்றோருடன் சென்று பள்ளி முதல்வரை அடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மோதல் விவகாரம் சமூக வலைதளத்தில் வீடியோவாக வைரலானது. பெற்றோர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். பள்ளி முதல்வர் சட்டை கிழிக்கப்பட்டதுபோல வீட்டியோ வெளியானது.


பெற்றோர்கள் அளித்துள்ள புகாரில்,” பள்ளி கழிவறையில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளதுடன், மாணவர்களிடம் பைபிள் வாசித்து வழிபடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.அதோடு இந்து பண்டிகைகளின்போது விடுமுறை அளிக்காமல் இருந்துள்ளார். பள்ளி முதல்வர் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் ,மாணவிகளிடம் கிறிஸ்துவத்தை திணித்துள்ளார்.” என்று தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால் 900 மாணவர்கள் படிக்கும் இந்தப் பள்ளி மறு அறிவிப்பு வரும்வரை மூடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை தொடங்கி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் வாசிக்க..


TN Rain Alert: மதியம் 1 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. கனமழை இருக்குமா? லேட்டஸ்ட் மழை நிலவரம் இதோ..


Tamizha Tamizha: மீண்டும் ‘தமிழா.. தமிழா’ நிகழ்ச்சி.. தொகுத்து வழங்கப்போவது யார் தெரியுமா?