கர்நாடக மாநிலம் ராமநகராவில் உள்ள ஒரு வீட்டில்  புதையலுக்காக சூனியம் செய்யும் சடங்குகளைச் செய்யும் போது, ​​தினசரி கூலி வேலை செய்யும் ஒரு பெண்ணை போலி சாமியார் ஒருவர் தனது முன் நிர்வாணமாக உட்காரும்படி கட்டாயப்படுத்திய கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது. பெண்ணும் அவரது  மகளும் மீட்கப்பட்ட நிலையில், 40 வயதான சாமியார், அவருடன் இருந்த 5 பேரை கர்நாடக போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.கைது செய்யப்பட்டவர்கள் போலி சாமியார் ஷாஹிகுமார், அவரது உதவியாளர் மோகன், கொத்தனார்கள் லட்சுமி நரசப்பா, லோகேஷ், நாகராஜ் மற்றும் பார்த்தசாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


எப்படி நடந்தது?


ஷாஹிகுமார் தமிழ்நாட்டை சேர்ந்தவர். கர்நாடக மாநிலம் பூனஹள்ளியைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீனிவாஸ் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமண நிகழ்ச்சிக்காக தமழ்நாடு சென்றிருந்தார். அப்போது ஷாஹிகுமாருடன் தொடர்பு கொண்டார். 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஸ்ரீனிவாஸின் வீட்டிற்கு ஷாஹிகுமார் வந்தார். அப்போது, ஷாஹிகுமார், ஸ்ரீநிவாஸ் வீட்டிற்குள் புதையல் மறைந்திருப்பதாக தெரிவித்தார். புதையலைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் அவரது குடும்பம் துன்பங்களைச் சந்திக்க நேரிடும் என்றும் ஸ்ரீநிவாஸ் கூறினார். 


பின்னர் இதற்கு பரிகாரம் செய்வதாக உறுதியளித்த சாஹிகுமார், ஸ்ரீனிவாஸிடம் இருந்து முன்பணமாக ரூ.20,000 வாங்கினார். கொரோனா ஊரடங்கு  காரணமாக, சாஹிகுமார் பணியை ஒத்திவைத்து வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவர் மீண்டும் ஸ்ரீனிவாஸிடம் சென்று பணியைத் தொடங்குவதாகக் கூறினார்.


சாமியார் சடங்குகளைச் செய்ய விவசாயியின் வீட்டில் ஒரு அறையைத் தேர்ந்தெடுத்தார். பூஜையின் போது நிர்வாணப் பெண்ணை தன் முன் உட்கார வைத்தால் புதையல் தானாகவே வெளிப்படும் என்று கூறினார். அந்தப் பெண் ஸ்ரீனிவாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இருப்பினும், சடங்குகளின் போது அவர் முன் நிர்வாணமாக உட்கார ஒரு பெண் தினசரி கூலியைத் தேர்ந்தெடுத்தனர். அந்த பணிக்காக அவருக்கு ரூ. 5,000 கொடுக்கப்பட்டது.



 


 


நரபலி கொடுக்க பெண்ணின் மகள் அழைத்து வரப்பட்டாரா?


சாமியார் மற்றும் பிறரின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து உள்ளூர்வாசிகள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்தப் பெண், பெண்ணின் மகள் ஆகியோரை மீட்டனர். மேலும், இதுதொடர்பாக சாமியார் உட்பட 5 பேரை கைது செய்தனர். 


மறைந்திருந்த புதையலைக் கண்டறிவதற்கான சடங்குகளின் போது நரபலி கொடுப்பதற்காக அந்தப் பெண்ணின் நான்கு வயது மகள் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், ராம்நகரா காவல் கண்காணிப்பாளர்  எஸ் கிரிஷ் அதனை மறுத்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண