சென்னை, கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள கல்லறை தோட்டத்தில் பணியாற்றி வந்தவர் உதயா. கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த உதயா, சென்னையில் பெய்து வந்த தொடர்மழையால் மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டார். கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்திலே வசித்து வந்த உதயா, உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு நேற்று அங்குள்ள கல்லறை ஒன்றின் மீது மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, உதயாவை தனது தோளில் தூக்கிச்சென்று ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்த வீடியோவும், புகைப்படமும் வைரலானது. இதையடுத்து, அவரை முதல்வரும், காவல்துறை உயரதிகாரிகளும் பாராட்டினர். இந்த நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த உதயா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.