பவர் பேங்க் ஆப் மூலம் முதலீடு செய்தால் 5 முதல் 10 % வரை முதலீடு செய்யும் பணத்திற்கு ஏற்ப வருமானம் கிடைக்கும் என்று சமூக வலைத்தளங்களில் சில மர்ம நபர்கள் தொடர்ந்து விளம்பரங்கள் செய்து வந்தனர். இந்த விளம்பரங்களை நம்பிய பலர் தங்களது செல்போனில் கூகுள் ப்ளே ஸ்டோர் வழியாக பவர் பேங்க் ஆப் பதிவிறக்கம் செய்து அந்த செயலி மூலம் 71000 முதல் ஒரு லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர். முதலில் முதலீடு செய்த நபர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட பணம் அனுப்பியதாகவும்,பிறகு முதலீடு செய்த நபர்கள் அனைவருக்கும் முதலீடு செய்த பணம் கிடைக்காமல் போனதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதனைத்தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், பவர் பேங்க் ஆப் மோசடி முழுவதும் நடந்து இருப்பது தெரியவந்தது. மேலும் தமிழகத்தில் 122 க்கு மேற்பட்டோர் மற்றும் இந்தியா முழுவதும் 5 லட்சம் பேர் இந்த ஆப்பில் முதலீடு செய்து பல லட்சம் வரை இழந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சிபிசிஐடி போலீசார் டெல்லி சிறையில் உள்ள முக்கிய குற்றவாளியான அவிக் கெடியாவை கைது செய்து விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி கடந்த வாரம் டெல்லி சென்ற சிபிசிஐடி போலீசார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவிக் கெடியாவை நீதிமன்ற உத்தரவுப்படி கைது செய்தனர். பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவிக் கெடி யை சிபிசிஐடி போலீசார் நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.வழக்கை விசாரித்த நீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி அவரை 2 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
நம்பர் பிளேட்டில் 'SEX' என்ற வார்த்தை - தர்மசங்கடத்தில் புதிய டூ வீலர் உரிமையாளர்கள்..!
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
IPL 2022 Retention: இத்தனை கோடியா... தக்க வைக்கப்பட்ட ஐபிஎல் வீரர்கள் 27 பேரின் விலை இது தான்!