இந்தியாவில் ஆண்டுதோறும் டி20 போட்டிகளுக்கான ஐ.பி.எல். தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், அடுத்தாண்டு முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. மேலும், அடுத்த ஐ.பி.எல். தொடரில் அனைத்து அணிகளிலும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும், மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தின் மூலமாகவே இடம்பெற முடியும் என்றும் தெரிவித்திருந்தது.
அதன்படி, ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 30-ந் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நேற்று அறிவித்தது.
பட்டியல் பின்வருமாறு :
சென்னை சூப்பர் கிங்ஸ் :
ஜடேஜா - 16 கோடி ரூபாய்
தோனி - 12 கோடி ரூபாய்
மொயின் அலி -8 கோடி ரூபாய்
ருதுராஜ் - 6 கோடி ரூபாய்
மும்பை இந்தியன்ஸ் :
ரோகித் சர்மா- 16கோடி ரூபாய்
ஜஸ்பிரீத் பும்ரா- 12கோடி ரூபாய்
சூர்யகுமார் யாதவ்- 8 கோடி ரூபாய்
பொல்லார்டு- 6 கோடி ரூபாய்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் :
விராட் கோலி- 15கோடி ரூபாய்
மேக்ஸ்வேல்- 11கோடி ரூபாய்
முகமது சீராஜ்- 7 கோடி ரூபாய்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :
கேன் வில்லியம்சன்- 14கோடி ரூபாய்
அப்துல் சமாத்- 4 கோடி ரூபாய்
உம்ரான் மாலிக்- 4 கோடி ரூபாய்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :
ஆந்ரே ரஸல்- 12 கோடி ரூபாய்
வருண் சக்கரவர்த்தி- 8 கோடி ரூபாய்
வெங்கடேஷ் அய்யர் - 8 கோடி ரூபாய்
சுனில்நரைன் - 6 கோடி ரூபாய்
டெல்லி கேப்பிட்டல்ஸ் :
ரிஷப்பண்ட்- 16 கோடி ரூபாய்
அக்ஷர் படேல்- 9 கோடி ரூபாய்
பிரித்விஷா- 7.5 கோடி ரூபாய்
நோர்ட்ஜே - 6.5 கோடி ரூபாய்
பஞ்சாப் கிங்ஸ் :
மயாங்க் - 12 கோடி ரூபாய்
ஹர்ஷதீப் சிங் - 4 கோடி ரூபாய்
ராஜஸ்தான் ராயல்ஸ் :
சஞ்சு சாம்சன் - 14 கோடி ரூபாய்
பட்லர் - 10 கோடி ரூபாய்
ஜெய்ஸ்வால்- 4 கோடி ரூபாய்
இந்தநிலையில், 2022 ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு அதிக விலையில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சென்னை அணியில் எப்பொழுதும் நீங்கா இடம் பிடிக்கும் தோனியை பின்னுக்குத்தள்ளி ஜடேஜா 16 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் :
சென்னை சூப்பர் கிங்ஸ் : ஜடேஜா - 16 கோடி
மும்பை இந்தியன்ஸ் : ரோஹித் சர்மா - 16 கோடி
டெல்லி கேபிட்டல்ஸ் : ரிஷப் பண்ட் - 16 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : விராட் கோலி - 15 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : வில்லியம்சன் - 14 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் : சஞ்சு சாம்சன் - 14 கோடி
பஞ்சாப் கிங்ஸ் : மயங்க் அகர்வால் - 12 கோடி
மும்பை இந்தியன்ஸ் : பும்ரா - 12 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : ஆந்ரே ரஸல்- 12 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் : எம்.எஸ்.தோனி - 12 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : மேக்ஸ்வல் - 11 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் : பட்லர் - 10 கோடி
அடுத்த ஐ.பி.எல். தொடரில் லக்னோ, அகமதாபாத் அணிகளும் பங்கேற்க உள்ளதால் பல்வேறு வீரர்களும் புதிய அணிகளுக்கு மாற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படி 8 அணிகளும் தங்களுடைய தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை அளித்த பின்பு புதிய இரண்டு அணிகள் வீரர்களை தேர்வு செய்யலாம். இந்த இரண்டு அணிகளும் 2 இந்திய வீரர் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரை தேர்வு செய்யலாம். இந்த இரண்டு அணிகளுக்கும் டிசம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதாக தெரிகிறது. இவை அனைத்தும் முடிந்த பிறகு ஜனவரி மாதத்தில் ஐபிஎல் வீரர்கள் ஏலம் இருக்கும் என்று கருதப்படுகிறது.